“மாநாடு” படத்தில் சிம்புவு-க்கு வில்லனாக ஓகே சொன்ன நடிகர் யார் தெரியுமா?..

சிம்புவுக்கு வில்லனாக நடிக்க, கன்னட ஹீரோ சுதீப் ஓ.கே.சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தொடங்க இருப்பதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே அறிவித்திருந்தார். படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது

இதனால் படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார், சுரேஷ் கமாட்சி. இந்நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையிலான பிரச்னையை தயாரிப்பாளர்கள் சிலர் பேசி தீர்த்தனர். இதையடுத்து, படத்தை மீண்டும் தயாரிக்க முன் வந்தார் சுரேஷ் காமாட்சி. அடுத்த மாதத்தில் இருந்து மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. அதற்காக, தன்னைத் தயார்படுத்தி வருகிறார் சிம்பு. இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லன் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருப்பதால் பவர்புல் வில்லனை தேடி வந்தனர். இந்நிலையில், சல்மான் கானின், தபாங் 3 படத்தில் சுதீப்பின் வில்லன் கேரக்டர் பேசப்பட்டதால் அவரை வில்லனாக்க முடிவு செய்தனர். கன்னட ஹீரோ சுதீப், தமிழில், நான் ஈ, புலி, முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், முதலில் கதை சொல்லுங்கள், பிடித்திருந்தால் நடிக்கிறேன் என்று தெரிவித்தார் சுதீப். இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு, சுதீப்பை சந்தித்து கதை சொன்னார். கதையை கேட்ட சுதீப், அவரது கேரக்டர் பிடித்திருந்தாதால், உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தெரிகிறது. படத்துக்கு, மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகிறது.

Advertisements

Next Post

"பாரதிராஜா" கூறும் பிளாஷ்பேக்.. "பாக்யராஜை" ஹீரோவாக நடிக்க வைத்த போது பைத்தியமா? என்று என்னைக் கேட்டார்கள்..

Thu Dec 26 , 2019
பாக்யராஜை ஹீரோவாக நடிக்க வைத்த போது பைத்தியமா? என்று என்னைக் கேட்டார்கள் என்று இயக்குனர் பாரதிராஜா சொன்னார். டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, வேதம் புதிது தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக்கல்லூரியில் நேற்று […]
%d bloggers like this: