அனல் பறக்கும் “மாறா” தீம் பாடல்..! இப்ப நானும் வேறடா….கிட்ட வந்து பாருடா….

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில் அடுத்தடுத்து வெளிவந்த இப்படத்தில்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.  

இந்நிலையில் தற்போது “மாறா” இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில் பதிவிட்டு சூர்யா பாடும் ஒரு சிறிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.திருக்குறள் அறிவு எழுதியுள்ள இப்பாடலை  சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisements

Next Post

சுந்தர்.சி-யின் அரண்மனை 3 படத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?அந்த ஹீரோயினும் இருக்காங்களாம்....

Tue Jan 21 , 2020
அரண்மனை 3 படத்தில் மேலும் சில நடிகர்கள், நடிகைகள் இணைந்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில், வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அரண்மனை. யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் சுந்தர் சியும் நடித்திருந்தார். பேய் படமான இது, கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது. அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார். இதில், த்ரிஷா, சித்தார்த், […]
%d bloggers like this: