‘சூர்யா’-வின் அடுத்த படத்தை இயக்குனர் “வெற்றிமாறன்” இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு..!

வெற்றிமாறன்

தமிழ் சினிமா கண்டெடுத்த சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் பொல்லாதவன் , ஆடுகளம் , விசாரணை , வட சென்னை , அசுரன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி திறமையான இயக்குனராக பார்க்கப்படுகிறார். 
 கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவித்து  அப்படத்தில் நடித்திருந்த கலைஞர்களுக்கும் பெருமையை தேடி தந்தது. இப்படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கவேண்டும் என மக்களே ஆசைப்படுமளவிற்கு அப்படத்தின் வெற்றி வழிவகை செய்தது.  

இந்நிலையில் அசுரனின் அசாதாரண வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் தற்போது தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் என்பதை கலைப்புலி எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்தை VtheVcreations நிறுவனம் தயாரிப்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த சூர்யாவின் ரசிகர்கள் #Suriya40 ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துள்ளனர். 

Advertisements

fogpriya

Next Post

"ட்ரான்ஸ்ப்ரன்ட்" உடையில் பிக்பாஸ் பிரபலம்..

Sun Dec 22 , 2019
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபிராமி ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். மாடலான அபிராமி ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அதற்கு முன்னதாக அவர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அபிராமி பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகே ரிலீஸானது. இதனால் பிக்பாஸ் அபிராமி என்றே அடையாளம் காணப்பட்டு வருகிறார். இந்நிலையில் […]

Actress HD Images

%d bloggers like this: