சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணன் படத்தின் நாயகி தமன்னா தான் என முடிவு.. இவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாம்…

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணன் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் பல கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்னும் இந்த படத்தின் நாயகி உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஏற்கனவே ஒரு நடிகை நடித்து வந்தாலும் இந்த படத்தின் நாயகி கேரக்டரில் நடிக்கும் நடிகை இன்னும் நிரப்பப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி தமன்னா தான் என முடிவு செய்துவிட்டதாகவும் இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டதாகவும், இந்த படத்திற்காக தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் இதுவரை பெறாத மிகப்பெரிய தொகையை தமன்னா பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் தமன்னாவுக்கு அழுத்தமான கேரக்டர் என்றும் அந்த கேரக்டரின் முழு வடிவத்தையும் கேட்ட பின்னர் தமன்னா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் பொங்கல் முடிந்த உடன் தொடங்க இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பில் அருள்சரவணன் உடன் தமன்னா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை ஜேடி ஜெர்ரி என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே விக்ரம், அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப்
படத்திற்கு எஸ்எஸ் மூர்த்தி கலை இயக்குனராக பணி புரிந்து வருகிறார்.

Advertisements

Next Post

கோவை-யில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை

Fri Dec 27 , 2019
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவனை […]

Actress HD Images

%d bloggers like this: