வெறித்தனமான “மாஸ்டர்” மூன்றாவது லுக் போஸ்டர்..!!

விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் தயாரிக்கிறது. ஏப்ரலில் வெளியாகும் இந்த படத்தின் மூன்றாவது போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இத்திரைப்படத்தின் முதல் 2 போஸ்டர்களிலும் விஜய் இடம்பெற்றிருந்த நிலையில், விஜய் சேதுபதியின் தோற்றத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஆக்ரோஷமாக விஜய்யும், விஜய் சேதுபதியும் ரத்தம் சிதற வெறித்தனமாக மோதுவது போன்று இடம்பெற்றுள்ளது.

Advertisements

Next Post

தமிழ் நன்றாக பேசத் தெரிந்தும் நடிக்க வாய்ப்பில்லை.... ஏங்கிய கல்கி கோச்சலினு-க்கு வாய்ப்பு கொடுத்த விக்னேஷ் சிவன்..!!

Mon Jan 27 , 2020
விக்னேஷ் சிவன் இயக்கும் வெப் சீரிஸில் நடிகை கல்கி கோச்சலின் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிம்பு நடித்த போடா போடி, விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். பெரிய பட்ஜெட் படமான இதை லைகா தயாரிப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது வேறு நிறுவனத்திடம் பேசிவருகிறார் விக்னேஷ். இதற்கிடையெ […]
%d bloggers like this: