சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ’டாக்டர்’ என்ற திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் மற்றும் ’ஹீரோ’ தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ’டாக்டர்’ படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் என்றும், படத்தொகுப்பாளர் நிர்மல் என்றும், கலை இயக்குனர் கிரண் என்றும், சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவ் என்றும், காஸ்டியூம் டிசைனர் பல்லவி சிங் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் நாயகி மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி தொடங்க திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

வில்லி நடிகையின் வலையில் சிக்கிய ஹீரோ.. கணவர் மீது நடிகை போலீசில் புகார்.. பிரபல சீரியல் நடிகர் கைது..!

Tue Dec 3 , 2019
மனைவியை தாக்கிய வழக்கில் பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாத் கைது செய்யப்பட்டுள்ளார். கல்யாணப் பரிசு உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாத். சின்னத்திரையில் நடன இயக்குனராக உள்ள ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜெயஸ்ரீயும் சீரியல் நடிகை தான். அவர் வம்சம் உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பின் இவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையில் வசித்து வருகின்றனர். […]

Actress HD Images

%d bloggers like this: