தொலைக்காட்சி தொகுப்பாளினி கழுத்தை நெரித்துக் கொலை..!!பஞ்சாபில் கொடூர சம்பவம்…

பஞ்சாப் மாநிலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அனிதா சிங் என்ற இளம் பெண்ணை அவர் கணவரே கொலை செய்து உடலை எரித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தீயில் கருகி உருக்குலைந்த நிலையில் இருந்த அனிதாவின் உடலை நைனிடால் பகுதியில் இருந்து போலீசார் மீட்டனர். 29 வயதான அனிதா இன்னொருவனுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக அவர் கணவர் ரவீந்தர் பால் சிங் சந்தேகித்தார்.

இதனால் கடந்த மாதம் 30ம் தேதி மனைவியை நைனிடாலில் உள்ள குல்தீப் என்ற நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பின்னர்  நண்பனின் உதவியுடன் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர் இருவரும் நள்ளிரவில் அனிதாவின் உடலை காட்டுக்கு கொண்டு சென்று எரித்து விட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisements

Next Post

மனைவியை தோலை உரித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. அதிர்ச்சியில் உறைந்த போலீசார்..

Sat Feb 15 , 2020
போதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் கத்தியை எடுத்து குத்தி தோலை தனியாக உரித்தெடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பதபதைக்க வைத்துள்ளது. மெக்ஸிகோ நகரை சேர்த்தவர் எரிக் பிரான்சிகோ ரோப்லேடோ என்ற 46 வயதான இவருக்கு 25 வயதில் மனைவி உள்ளார் இவர்களுக்கு வயது பொருத்தம் காரணத்தினால் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த வாக்குவாதம் கடுமையான வாக்குவாதமாக முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் சமயலறைக்கு சென்று அங்கிருந்த கத்தி […]
%d bloggers like this: