கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் ’96’ ரீமேக் ஜானு நஷ்டமாம்..!!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 96. பிரேம் குமார் இயக்கி இருந்த இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவி என்ற ஜானுவாக த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர்.அனைவருடைய காதலையும் உலுக்கிப் பார்த்த, இவரது கேரக்டர்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கு த்ரிஷா நடித்த கேரக்டரில் பாவனாவும் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷூம் நடித்திருந்தனர். திருமணத்துக்கு பிறகு பாவனா நடித்த முதல் படம் இது. சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழில் ஹிட்டான அளவுக்கு கன்னடத்தில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

விஜய் சேதுபதி கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்தனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கினார். கோவிந்த் வசந்தா இசை அமைத்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்தது. தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இயக்குனர் இதை மறுத்திருந்தார்.

இந்தப் படத்துக்கு ஜானு என்று தெலுங்கில் டைட்டில் வைத்திருந்தனர். இந்தப் படம் கடந்த 7 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. என் மனதுக்கு நெருக்கமான படம் இது என்று நடிகை சமந்தா தெரிவித்திருந்தார். அதோடு படம், சிறப்பான வரவேற்பை பெற்றிருப்பதாகவும் சொன்னார். ஆனால், அவர் சொன்னது போல படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது.இந்தப் படத்தின் தியேட்டரிக்கல் உரிமையை ரூ.21 கோடிக்கு விற்றுள்ளனர். அதை விட அதிகமாக வசூலிக்கும் என்று நம்பியிருந்தனர். ஆனால், மொத்தமாக 70 சதவிகித நஷ்டத்தை படம் சந்திக்கும் என்கிறார்கள், டோலிவுட்டில். தமிழில் ரசிகர்களை டச் பண்ணிய காதல் எமோஷன், தெலுங்கு படத்தில் மிஸ்சிங் என்பதால் எதிர்பார்த்த அளவு படம் ஓடவில்லையாம்.

மொத்தமாக, இந்தப் படம் வெறும் 7 கோடி ரூபாய் மட்டும் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் சமந்தாவுக்காக மட்டுமே இந்த வசூலாம். வழக்கமாக தெலுங்கு படங்களுக்கு அமெரிக்காவில் நல்ல வசூல் கிடைக்கும். எந்த படம் வெளியானாலும் பெரிய ஓபனிங் இருக்கும். ஆனால், இந்தப் படம் அங்கும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். ஜானுவை ரசிகர்கள் ஓரங்கட்டியது ஏன் என்பது யோசித்து வருகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

Advertisements

Next Post

செம க்யூட்.. தெறிக்க விடும்... விஜயின் "மாஸ்டர்" பட புகைப்படங்கள்... உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்..!!!

Mon Feb 17 , 2020
நடிகர் விஜயின் மாஸ்டர் பட ஸ்டில்ஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ கடந்த 14 ஆம் தேதி […]
%d bloggers like this: