“தலைவி”மாதிரி மாற கங்கனா ரனாவத் எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்காங்க..!

சென்னை: தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்று நடிப்பதற்காக நிறைய ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டதாகக் கூறியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான போதே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. நிச்சயம் கங்கனா அந்த கேரக்டருக்கு செட் ஆக மாட்டார் என விமர்சனங்களும் எழுந்தன.

ஆனாலும் மனம் தளராமல் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் அந்தக் கதாபாத்திரத்துக்கு தயாரானார் கங்கனா. பரதநாட்டியம் கற்றார், தமிழ் பேச கற்றுக் கொண்டார். ஜெயலலிதா போன்று நடிப்பதற்காக பல்வேறு பயிற்சிகளை அவர் மேற்கொண்டார். சமீபத்தில் தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் கங்கனாவின் தோற்றம் வழக்கம் போலவே சர்ச்சையில் சிக்கியது. ஜெயலலிதா போன்ற தோற்றத்தைக் கொண்டு வர அவர் கடினமாக உழைத்திருப்பது வெளிப்படையாகவேத் தெரிந்தது. மேக்கப்பையும் தாண்டி அவர் சற்று எடை கூடியிருப்பதையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், தலைவி படத்திற்காக தான் எடுத்துக் கொண்ட கடின முயற்சிகள் பற்றி பேட்டியொன்றில் தெளிவாகப் பேசியுள்ளார் கங்கனா. அதில் அவர், ‘தனது உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக வயிறு மற்றும் தொடைகளைச் சுற்றிலும் தோற்றத்திற்காக தேவைப்பட்டதால் அதற்கேற்ற உணவுகளை சாப்பிடத் தொடங்கியதாகவும், லேசான அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை எடுக்க வேண்டியிருந்ததாகவும் கங்கனா கூறியுள்ளார்.

இயக்குநர் விஜய், ஜெயலலிதா போன்ற தோற்றமே வேண்டுமென கேட்டுக் கொண்டதால் இவற்றைச் செய்ததாக அவர் கூறியுள்ளார். தலைவி படத்திற்காக கங்கனா 6 கிலோ எடை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், “ஜெயலலிதா அவர்கள் தனது வாழ்க்கையில் கடுமையான உடல் மாற்றத்தை எதிர்கொண்டார். பரத நாட்டிய நடனக் கலைஞராக வளர்ந்தவர் கண்ணாடி போன்ற பளபளப்பான உருவம் கொண்டிருந்தார.

அரசியலுக்கு பின் ஏற்பட்ட விபத்தில் அதிக அளவில் ஸ்டெராய்டுகள் எடுக்க வேண்டியிருந்தது. அதெயெல்லாம் சித்தரிக்க விரும்பியதால் நானும் ஹார்மோன் மத்திரைகளை எடுத்துக் கொண்டேன்” என அப்பேட்டியில் கங்கனா தெரிவித்துள்ளார். தலைவி படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

கணவருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா..!

Fri Nov 29 , 2019
உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.  இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இடையிடையே அவருடன் […]
%d bloggers like this: