அப்படியே இருக்காரே.. அட்டகாசமாக வெளியான “தலைவி” பர்ஸ்ட் லுக்.. அரவிந்தசாமி-யின் எம்ஜிஆர் புகைப்படம்..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படும் ’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் எம் ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். அவருடைய கேரக்டர் இந்த படத்தில் முக்கியத்துவம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று எம் ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரவிந்த்சாமி நடித்த எம் ஜிஆர் கேரக்டர் குறித்த பர்ஸ்ட் லுக் வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அதன்படியே எம் ஜிஆர் கேரக்டர் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருப்பதால் எம் ஜிஆரையே மீண்டும் உயிரோடு பார்த்தது போல அவரது தொண்டர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அப்டேட் ...

Fri Jan 17 , 2020
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. பாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற […]

Actress HD Images

%d bloggers like this: