ஜெயலலிதா போல் இல்லையே: ‘தலைவி’ செகண்ட் லுக்கை கிண்டலடித்த நெட்டிசன்கள்..!!

பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். மேலும் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வரும் இந்த படம் வரும் ஜூன் 26-ம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஜெயலலிதா குறித்த போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளானது. ஜெயலலிதாவிற்கும் இந்த போஸ்டருக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இதனை அடுத்து இந்த படத்தின் அடுத்த போஸ்டர் அசத்தும் வகையில் இருக்க வேண்டும் என படக்குழுவினர் பணிசெய்து வந்தனர். இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த போஸ்டரிலும் கங்கனா ரனாவத் ஜெயலலிதா போல் இல்லை என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும் இந்த போஸ்டரை எப்படி டிசைன் செய்தார்கள் என்று தெரியவில்லை என்ற ஆச்சரியத்தில் அனைவரும் மூழ்கி உள்ளனர்.ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்த அரவிந்தசாமி கேரக்டர் அச்சுஅசலாக எம்ஜிஆர் போலவே இருந்தது என்பதும், அதனை நெட்டிசன்கள் பாராட்டவும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

தோழியை மணமுடிக்க ஆணாக மாறிய பெண்..! மதுரையில் நடந்த திருமணம்...

Mon Feb 24 , 2020
மதுரையில் கல்லூரி தோழியை காதலித்து வந்த பெண் ஆணாக மாறி சட்டப்படி திருமணம் செய்துகொண்ட சம்பம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது நான்கு வருடமாக விஷ்ணுபிரியா என்ற மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த சூழலில் ஆண், பெண்ணை போல இருவரும் இருந்ததால் பவித்ராவின் பெற்றோர் விஷ்ணு பிரியாவுடன் இருக்கும் தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு கண்டித்துள்ளனர். ஆனால் இருவருடைய பழக்கம் காதலாக மாறியதால் […]
%d bloggers like this: