விஜய்யின் அடுத்த படம் தளபதி 65 எந்த நிறுவனத்திற்கு தெரியுமா? வைரலாகும் தகவல்..!

விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியவைகளை விஜய் தேர்வு செய்து விட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது அந்த வகையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி ’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக தெரிகிறது. ஆனால்
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அல்லது மகிழ்திருமேனி ஆகிய இருவரில் ஒருவர்தான் என்று விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக மகிழ் திருமேனிக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு உ ள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் நல்ல லாபத்தைக் கொடுத்த நிலையில் மீண்டும் விஜய் படத்தை இயக்க சன் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் அதற்கு விஜய்யும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் சன்பிக்சர்ஸ், விஜய், மகிழ்திருமேனி, அனிருத் இணையும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisements

Next Post

தனுஷ்41 படப்பிடிப்பு துவக்கம்..! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ..!

Sat Jan 4 , 2020
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் கூட்டணியில் மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் திரைப்படத்தை அடுத்து, தனுஷ் தற்போது ‘பட்டாஸ்’ திரைப்படத்தி வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். அதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 40-வது திரைப்படத்தின் ஷூட்டிங்கையும் முடித்துள்ளார் தனுஷ். இன்னும் பெயர் சூட்டப்படாத தனுஷ்40 படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தனது 41-வது திரைப்படத்தின் வேலைகளில் இறங்கியுள்ளார் தனுஷ். […]

Actress HD Images

%d bloggers like this: