அட்லீயை கைவிட்ட விஜய்.. பெண் இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி.. அனல் பறக்கும் தளபதி 65 அப்டேட்..!!

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில் தளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறது என தளபதி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. அதற்கு காரணம் தளபதி விஜய் இதுவரை கிட்டத்தட்ட 10 முதல் 15 இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார் என்பது தான். தளபதி 65 நேரத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க போகிறது என்பது ஏற்கனவே உறுதியான தகவல் தான். இந்நிலையில் தளபதி விஜய் தற்போது தளபதி 65 படத்திற்கான இயக்குனரை தேர்ந்தெடுத்து விட்டாராம்.

அவர் வேறு யாரும் இல்லை. இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்காரா என்ற பெண் இயக்குனர் தான். மேலும் சிறப்பம்சமாக தளபதியின் தீவிர ரசிகரான ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பதும் தான். சமீபத்தில் வெளியான அசுரன் படத்தில் பின்னணி இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது. சமீபகாலமாக தளபதி விஜய் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய இயக்குனராக இருந்தாலும் வாய்ப்பு தருவது சினிமா உலகில் நல்ல விஷயமாக கருதப்படுகிறது.கண்டிப்பா இது வெறித்தனமான கூட்டணிதான்.

Advertisements

Next Post

மேன் VS வைல்டு ஷூட்டிங்கில் ரஜினிக்கு என்ன ஆச்சு..? தலைவர் 168 ஷூட்டிங் பாதிக்குமா..?

Wed Jan 29 , 2020
மேன் VS வைல்டு ஷூட்டிங்கின் போது காயம்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி. மேன் vs வைல்டு ஷூட்டிங்கின் போது காயம்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி. டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான Man vs Wild-ஐ பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பதை தத்ரூபமாக […]

Actress HD Images

%d bloggers like this: