13ந் தேதி திரைக்கு வரும்.. வித்தியசமான பேய் படம் “கைலா”..!

கைலா படம் இம்மாதம் 13ந் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் பாஸ்கர் சீனுவாசன் தெரிவித்துள்ளார். வழக்கமான பேய் படமாக இது இல்லாமல் வித்தியாசமான விஞ்ஞானபூர்வமான ஒரு பேய் படமாக இருக்கும் என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் எப்போதுமே பேய்களுக்கு என்று ஒரு மவுசு உண்டு, காஞ்சனா, அரண்மனை, தேவி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இப்போது கைலா படம் சேர்ந்துள்ளது. இப்படம் வரும் 13ந் தேதி திரைக்கு வர உள்ளதாக அதன் இயக்குனரும் தயாரிப்பாளருமான பாஸ்கர் சீனுவாசன் தெரிவித்துள்ளார்.

இந்த உலகத்துல ஆவிகள் இருக்கா?அப்படி இருந்தாலும் அந்த ஆவிபழிவாங்குமா? இந்த கேள்விகளுக்கு விஞ்ஞானப்பூர்வமாக இதுவரை யாரு கிட்டதையும் பதில் இல்லை. ஆனாலும் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கு, இதை அடிப்படையாக வைச்சி உருவாக்கப்பட்ட படம் தான் கைலா.

நாயகி தானா நாயுடுவுக்கு இது முதல் படம், இப்படத்தில் ஒரு எழுத்தாளராக வரும் தானாநாயுடு, பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுக்கும் போது, பல வருடங்களாக பூட்டிகே இருக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்குறாங்க. அந்த மர்மமான வீட்டில் இரண்டு தற்கொலைகள், எதிர்பாராத திகில் சம்பவங்கள்,நான்கள் கொலைகள், என படு பயங்கரமான த்ரில்லிங் திரைக்கதையை அமைத்துள்ளோம்.இதை நான் சொல்லுறத விட படத்தை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் வியப்படையவார்கள், வழக்கமான பேய் படமாக இது இல்லாமல் வித்தியாசமான விஞ்ஞானபூர்வமான ஒரு பேய் படம் இது இருக்கும் என்று தயாரிப்பார் பாஸ்கர் சீனிவாசன் தெரிவித்தார். இப்படத்தில், கௌசல்யா, அன்பாலயா பிரபாகரன், சிசர்மனோகர், மதுரை வினோத், வீரா, கோகன், குழந்தை நட்சத்திரம் கைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரவன் இசையமைந்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

நடிகை "ஸ்ரேயா" லண்டன் போலிஸாரால் திடீர் கைது..!

Wed Dec 11 , 2019
தமிழ் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற நடிகை ஸ்ரேயா அங்குள்ள போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுர படத்தின் இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் சண்டக்காரி எனும் படம் உருவாகி வருகிறது. இதில்  நடிகர் விமல் மற்றும் ஸ்ரேயா நடிக்கின்றனர்.  இந்த படத்தின் ஷூட்டிங் லண்டன் விமான நிலையம் அருகே நடைபெற்றது. அப்போது படப்பிடிப்புத் தளத்தில் இருந்த ஸ்ரேயே திடீரெனக் காணாமல் போனார். இதையடுத்து படக்குழு அவரைத் தேட போலிஸார் அவரைத் […]

Actress HD Images

%d bloggers like this: