அவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. ரஜினிகாந்தின் மலரும் நினைவுகள்..!

தமிழ் திரையுலகில் தான் நடிக்க வந்த புதிதில் தன்னை ஒரு தயாரிப்பாளர் அவமானப்படுத்தி வெளியே போ என்று சொல்லி விட்டதாகவும் அந்த தயாரிப்பாளர் முன் இரண்டே வருடங்களில் சூப்பர் ஸ்டார் ஆகி காட்டியதாகவும் ரஜினிகாந்த் தனது மலரும் நினைவுகளை நேற்றைய தர்பாரில் இசை வெளியீட்டு விழாவின் போது தெரிவித்தார்.
பாரதிராஜாவின் 16 வயதினிலே’ படத்தில் பரட்டை என்ற கேரக்டரில் தான் நடித்துக்கொண்டிருக்கும் போது தனக்கு மிகப் பெரிய புகழ் கிடைத்ததாகவும் அந்த புகழின் காரணமாக தன்னை ஒரு தயாரிப்பாளர் அணுகி, தான் தயாரிக்கும் படத்தில் புக் செய்ய வந்ததாகவும் ஆனால் அவர் கடைசி நேரத்தில் திடீரென தனக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து அவமானப்படுத்தியதாக கூறினார்அந்த அவமானத்தில் மனமுடைந்த தான் இதே கோடம்பாக்கத்தில் பெரிய ஸ்டாராக ஆகி காட்டுகிறேன் என்று மனதுக்குள் சவால் விட்டதாகவும் அந்த சவாலை இரண்டே ஆண்டுகளில் முடித்ததாகவும் கூறினார்.இருப்பினும் தனது சவால் நிறைவேற தன்னுடைய உழைப்பு மட்டுமே காரணமில்லை எனவும், இயக்குனர்கள் தயாரிப்பாளர் மற்றும் தனக்கு அமைந்த கேரக்டர்களும் காரணம் என்று தன்னைத்தானே உணர்ந்ததாகும் அன்றிலிருந்து தான் தன்னுடைய உண்மையான வளர்ச்சி ஆரம்பமானது என்றும் ரஜினிகாந்த் தனது பேச்சில் கூறினார்.

Advertisements

fogpriya

Next Post

அன்றும் இன்றும் என்றும் ஒரே "சூப்பர் ஸ்டார்" ரஜினிதான் - அனிருத் புகழாரம்..!

Sun Dec 8 , 2019
ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவுல் படக்குழுவினர் , கோலிவுட் பிரபலங்கள் , ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.   இவ்விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இங்கு அமர்ந்திருப்பவர்களை விட பெரிய ரசிகன் நான். நிலாவை பார்த்து சாப்பிட்ட நாம் நிலவில் […]

Actress HD Images

%d bloggers like this: