லெஜண்ட் சரவணன் நடிக்கும் “புரொடக்‌ஷன் நம்பர் 1” படத்திற்கான படப்பணிகள் தொடக்கம்..!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்திற்கான பணிகளை திரை பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்து வந்த லெஜண்ட் சரவணா தற்போது புதிய படம் ஒன்றை தானே தயாரித்து நடித்தும் வருகிறார். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை தயார் செய்த ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் இந்த படத்தை இயக்குகின்றனர்.

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னனி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் க்ரித்திகா திவாரி என்ற நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகரன் படத்திற்கு வசனங்கள் எழுதுகிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதுதவிர பிரபு, கோவை சரளா, நாசர், விவேக், மயில்சாமி, தம்பி ராமையா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இன்னமும் தலைப்பிடப்படாத அந்த படத்திற்கு ‘புரொடக்‌ஷன் நம்பர் 1” என இப்போதைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்கி சென்னை, கோயம்புத்தூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது.

Advertisements

fogpriya

Next Post

நான் பெண்களை அவதூறாக பேசவில்லை..! – பாக்யராஜ் விளக்கம்..!

Mon Dec 2 , 2019
பெண்கள் பற்றி பாக்யராஜ் அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் பாக்யராஜ். சமீபத்தில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் ”பொள்ளாச்சி பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல! எச்சரிக்கையாக இல்லாத அந்த பெண்களும் காரணம்” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சில பெண்கள் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. இந்நிலையில் தான் பேசியது குறித்து விளக்கமளித்த பாக்யராஜ் […]
%d bloggers like this: