சினிமா-வின் தற்போதைய நிலையை கண்டு வருந்துகிறேன்…. சீமான்

நேற்று சென்னை சாலிகிராமத்தில் இயங்கி வந்த எழுத்தாளர் அஜயன் பாலாவின் ‘பாலுமகேந்திரா நூலகத்தின்’ புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாரதி ராஜா, சீமான், அமீர் உள்ளிட்ட பல திரையுல பிரபலங்களும், எழுத்தாளர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சினிமாவின் தற்போதைய நிலையை கண்டு தான் மிகவும் வேதனை படுவதாக தெரிவித்தார். சுமார் 1000 திரையரங்குகள் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 300-க்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் வெளியானாலும் முன்னணியில் இருக்கின்ற நடிகர்களை மட்டுமே முன்னிறுத்தி திரையரங்குகள் செயல்படுகின்றன என்று கூறினார்.

இந்த நிலை தொடர்வதால், சிறு மற்றும் குறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்கள் ஆண்டுக்கு நூறு படங்கள் என்ற வீதத்தில் வெளிவராமல் முடங்கிக்கிடக்கின்றன என்றும். இதுபோன்று முடங்கிப்போய் திரையரங்குக்கு வராமல் தேங்கிக்கிடக்கும் படங்களின் எண்ணிக்கை மட்டும் 1500-ஐ தாண்டும் என்றும் அவர் கூறினார்.  தரவரிசையில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுக்கு 400 திரையரங்குகளை ஒதுக்கலாம் என்றும் மேலும் மற்ற நடிகர்களுக்கு மீதமுள்ள திரையரங்குகளை ஒதுக்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியும் அதனை செயலாக்கம் செய்யாதது அந்த துறையின் நிர்வாகச்சீர்கேட்டின் அவலத்தை வெளிய்ப்படுத்துகிறது என்றார்.

Advertisements

Next Post

"இயக்குனர்" அவதார மெடுத்த ரம்யா நம்பீசன்..!!குவியும் வாழ்த்து மழை..!!

Sun Feb 16 , 2020
நடிகை ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் திரையின் பல பக்கங்களை, எப்போதும் முயன்று பார்ப்பவர். ஒரு பக்கம் பாடகராகவும் கலக்கிவரும் அவர், சமீபத்தில் இணையத்தில் கால்பதித்து யூடியூப் தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை “Ramya Nambeesan Encore” எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சேனலில் தனது இயக்கத்தில் முதல் குறும்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். The Hide ( UN )learn எனும் அந்த […]
%d bloggers like this: