துப்பறிவாளன்2 படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு முடிவடைந்து.. புத்தாண்டை கொண்டாட “அமெரிக்கா” பறந்தார்.. நடிகர் விஷால்..!!!

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளார் விஷால். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், துப்பறிவாளன் 2 படத்தின் முதல் லெக் முடிவடைந்து இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் . நடிகர் விஷால் அயோக்யா மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு பிறகு நடித்து வரும் படம்தான் துப்பறிவாளன் 2 .இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முடிந்ததால் தற்போது விஷால் ப்ரீயாக இருக்கிறார்.

இதையடுத்து வர இருக்கும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட விஷால் தனது நண்பனுடன் அமெரிக்கா சென்று இருக்கிறார். இந்த தகவலை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ,அதில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகாக அமெரிக்கா சென்றுள்ளேன் ஏனெனில் துப்பறிவாளன்2 படத்தின் முதல் லெக் முடிவடைந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார் . அதன் பின் துப்பறிவாளன் 2 மற்றும் டிடக்டிவ் 2 என்ற ஹாஸ்டேக்கையும் பதிவேற்றி இருக்கிறார் .துப்பறிவாளன் படம் மாபெரும் வெற்றி அடைந்த படம் விஷால் படங்களில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் என்று கூட சொல்லலாம் .இந்த படத்தின் தொடர்ச்சியாக எடுக்க பட்டு வரும் துப்பறிவாளன் 2 படத்தை வேறு மொழிகளிலும் விஷால் வெளியிட தயாராகி இருக்கிறார் என்று தெரிகிறது.

ஏனெனில் டிடக்டிவ் என்ற ஹாஸ்டேக்கை இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருந்து விஷால் பயன்படுத்தி வருகிறார் .அதை வைத்து பார்க்கும் போது இந்த படம் வேறு மொழிகளிலும் நேரடியாக வெளிவர வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிகிறது . துப்பறிவாளன் படத்தை போலவே இரண்டாம் பாகத்தையும் விஷாலே தயாரிக்கிறார் .இந்த படத்தை முதல் பாகத்தை போலவே இயக்குனர் மிஸ்கின் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் விஷால் ,பிரசன்னா , கௌதமி, ரஹ்மான், நாஸர், சுரேஷ் சக்கரவர்த்தி , நந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் .படத்திற்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. இந்த படத்தின் முதல் பாகத்திற்கு ஆரோல் கொரல்ளி இசையமைத்தார் . தற்போது லண்டனில் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழு இந்தியா திரும்பியுள்ளது . அடுத்த கட்ட படிப்பிடிப்பு இந்தியாவில் எடுக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. பிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் இந்த படத்தை தயாரித்துள்ளார், இந்த படத்திற்கு பிறகு விஷால் சக்ரா படத்தில் நடிக்க உள்ளார் .தற்போது அமெரிக்காவில் இருக்கும் விஷால் இந்தியா வந்தவுடன் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது .

Advertisements

Next Post

நடிகர்"அஜித்" டுவிட்டரு-க்கு வரவேண்டும்.. டுவிட்டரில் அவர் கணக்கு தொடங்க வேண்டும்: அழைப்பு விடுத்த டுவிட்டர் நிர்வாகம்..!

Mon Dec 30 , 2019
அஜித் டிவிட்டருக்கு வர வேண்டும் என்றும் டுவிட்டரில் அவர் கணக்கு தொடங்க வேண்டும் என்றும் விட்டர் இந்தியாவின் மேனேஜிங் டைரக்டர் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தல அஜித் அவர்கள் தான் நடிக்கும் திரைப்படங்களில் பூஜை, புரமோஷன் உள்பட எந்த விழாவுக்கும் வரமாட்டார் என்பது தெரிந்ததே. மேலும் அவருக்கு பேஸ்புக், டுவிட்டர் உள்பட எந்த ஒரு சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை என்பதும், ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது […]

Actress HD Images

%d bloggers like this: