“புத்தாண்டு” அன்றே பிறந்த நாள் கொண்டாடும் திரை பிரபலங்கள்..’தெறி’ பேபிக்கும் இன்று தான் பிறந்தநாள்..

புத்தாண்டு என்றாலே மகிழ்ச்சி தான் அதுவும் புத்தாண்டு அன்றே பிறந்த நாள் என்றால் கேட்கவே வேண்டாம் இரட்டிப்பு மகிழ்ச்சி தான். இன்று இத்தனை பேருக்கு இ‌ந்த இரட்டிப்பு சந்தோஷம் கிடைச்சிருக்குனு தெரியுமா? புத்தாண்டோடு சேர்ந்து அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறுவோம்.

நைநிகா

தெறி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் தான் நைநிகா. நடிகை மீனாவின் குழந்தையான நைநிகா தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் விஜய் உடன் தெறி மற்றும் அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல். தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார் தெறி பேபிக்கும் இன்று பிறந்தநாள்.

ஐஸ்வர்யா தனுஷ்

ரஜினியின் முத்த மகள் மற்றும் நடிகர் தனுஷின் மனைவி என்பதை விட இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயர் தான் இவருக்கு கரெக்டாக இருக்கும் சினிமாவில் பெண் இயக்குனர்கள் குறைவு அதில் ஒரு பெண்ணாக படங்களை இயக்கி வரும் ஐஸ்வர்யா தனுஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பிரேம்

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகர் பிரேம் பல படங்களில் துணை நடிகர் ஆக நடித்துள்ளார். பாலச்சந்தர் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய சீரியலில் அறிமுகமானவர் பிரேம். பிரேம்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரேம்.

கிரண்

தனது படங்களில் வரும் கலைகளை கரெக்டாக செய்யும் கிரண். ஒரு கலை இயக்குனர் தனது படங்களில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்ய கூடாது என்பதை உணர்த்திய உன்னத கலைஞன் பிறந்த நாள் வாழ்த்துகள்.

கே.ஆர்

கோதண்ட ராமையாவை தமிழ் திரையுலகினர் கே.ஆர் என்று தான் அழைப்பார்கள் தனது திரைபடங்களாலும் மற்றும் பல படங்களை தயாரித்தும் நம்மை மகிழ்வித்த கே.ஆர். அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

சோனாலி பிந்தரே

தனது ஒற்றை படத்தில் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் சோனாலி பிந்தரே காதலர் தினம் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சோனாலி பிந்தரே. அப்படத்தில் அவர் நடித்த ரோஜா கதாபாத்திரம் இன்றளவும் மக்கள் மனதில் நின்று கொண்டு இருக்கிறது,பிறந்த நாள் வாழ்த்துகள் பிந்தரே.

ரமா

பாரதிராஜா இயக்கிய என் உயிர் தோழன் படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் ரமா. தனது முதல் படத்திலேயே இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் நடித்தார் என்ற பெருமை சிலருக்கு உண்டு அதில் ரமாவும் ஒருவர். அதன் பின் தற்போது பல படங்களில் ஹீரோக்களும் ஹீரோயின்களுக்கும் அம்மாவாக நடித்து வருகிறார் ரமா. புத்தாண்டு அன்று பிறந்த நாள் கானும் இவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குனர் பாலாஜி சக்திவேல்

காதல் என்ற தனது முதல் படத்தில் முத்திரை பதித்தவர்.மற்றும் தனது படங்களால் அனைவரையும் கவர்ந்தவர் சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து படங்கள் எடுப்பதில் வல்லவர். இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Advertisements

Next Post

நீங்க ரொம்ப..திக்கி திணறும் ரஜினி... இருவருக்கும் இடையேயான ரொமான்டிக் காட்சி.. அசத்தலான தர்பார் புரமோ ரிலீஸ்..

Wed Jan 1 , 2020
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் புரமோ வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கூட்டணி முதல் முறையாக இணைந்து உருவாகியிருக்கும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடித்துள்ளார். தர்பார் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். ரஜினியின் […]

Actress HD Images

%d bloggers like this: