“தர்பார்” பட டிரைலர் இன்று வெளியாகிறது..

ரஜினிகாந்த்தின் 168வது படமான தர்பார் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்பட பலர் நடித்து வரும் புதிய படம் தர்பார். இந்தப் படத்தின் முதல் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் டிரெண்டிங் ஆகின. சும்மா கிழி கிழி என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ரஜினியின் சிங்கிள் பாடலும் வெளியிடப்பட்டது.

கடந்த 7ம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இன்றுமாலை 6.30 மணிக்கு தர்பார் படத்தின் டிரைலர் நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக படத்தின் இயக்குனர் முருகதாஸ் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

பிரபல ஆங்கில இதழின் சார்பில் பேஷன் விருதுகள் விழா

Mon Dec 16 , 2019
மும்பையில் நடைபெற்ற பிரபல பேஷன் பத்திரிகையான வோக் சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கான் அவர் மனைவி கவுரிகான் ஆகியோர் சிறந்த தம்பதிகளுக்கான விருதை பெற்றனர். நடிகர் ஹிருத்திக் ரோசன், மற்றும் அக்சய் குமார் ஆகியோர் இந்த ஆண்டுக்கான ஸ்டைல் விருதுகளைப் பெற்றனர். நடிகைகளில் அனுஷ்கா சர்மா ஸ்டைல் ஐகன் விருது பெற்றார். இவ்விழாவில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிகை கத்ரினா கைப் , இயக்குனர் […]
%d bloggers like this: