‘மீரா’ மிதுனோட பவரை பிடுங்கிய அரசு…இப்போ அந்த இடத்துல யாரு இருக்காங்க தெரியுமா?

ஊழல் தடுப்பு ஆணையத்தின் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை மீரா மிதுனின் இடத்திற்கு புதிய நபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் மூலம் பிரபலமானாலும், அதை அவரால் தமிழ் சினிமாவில் அறுவடை செய்ய முடியவில்லை. பல படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி மும்பையில் செட்டிலானார். பாலிவுட்டில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிடலாம் என நினைத்தார்.

திடீரென தமிழகம் வந்து தான் அரசியலில் இறங்கி நாட்டை சுத்தம் செய்யப் போவதாக அறிவித்தார். அதற்கு முதல் படியாக, மத்திய அரசின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராகத் தான் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அனைவரையும் அதிர வைத்தார். அதற்கு சான்றாக அந்த ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையையும் காட்டினார்.

ஆனால், சில மாதங்களிலேயே அந்தப் பதவியில் இருந்து மீராவை அதிரடியாக நீக்கியது ஊழல் தடுப்பு ஆணையம். மீராவுக்கு குற்றப் பின்னணி இருப்பதே அதற்கு காரணம் என கூறப்பட்டது. பல மோசடி வழக்குகளில் மீரா மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதற்கான காவல்துறை விடுவிப்பு சான்றிதழை மீரா சமர்ப்பிக்கவில்லை என்பதாலேயே இந்த நடவடிக்கை.ஆனால் ஊழல் தடுப்பு ஆணையம் தனது பதவியை பறிக்கவில்லை என்றும், அதுதொடர்பாக தனக்கு எந்த கடிதமும் வரவில்லை என்றும் மீரா மறுப்பு கூறியிருந்தார். மேலும், யாரோ சிலர் திட்டமிட்டு தனக்கு எதிராக வதந்தி பரப்புவதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மீரா மிதுனுக்கு பதிலாக திருச்சியைச் சேர்ந்த பிரபல டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் என்பவர் தற்போது அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை ஊழல் தடுப்பு ஆணையம் அவருக்கு அனுப்பியுள்ளது. ஆனால் அந்த பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

காவலன் 'எஸ்ஓஎஸ்' செயலியை, 10 நாட்களில், 3.50 லட்சம் பேர் பதிவிறக்கம் போலீஸ் கமிஷனர் தகவல்..!

Thu Dec 19 , 2019
சென்னை காவலன் எஸ்ஓஎஸ்’ செயலியை, 10 நாட்களில், 3.50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தனர்’ என, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசினார்.ஆபத்து நேரங்களில், பெண்களுக்கு உடனடியாக, போலீசாரின் உதவி கிடைக்க, தமிழக காவல் துறை, ‘காவலன்எஸ்ஓஎஸ்’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று, நுங்கம்பாக்கத்தில் உள்ள, லயோலா கல்லுாரியில் நடந்தது.இதில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்று, மாணவியருக்கு, ‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலி குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை […]

Actress HD Images

%d bloggers like this: