“ட்ரிப்”படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…கடத்தல் படமா இருக்குமோ? மரண வெயிட்டிங்…

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, சுனைனா, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சுனைனாவை ஒரு ஜீப்பின் மீது கட்டிவைத்து, யோகி பாபுவும், கருணாகரனும் சீட்டு ஆடும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜி.வி. பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜீப் மீது காயங்களுடன் கட்டப்பட்டுள்ள சுனைனா அமர்ந்திருக்க, யோகி பாபு மற்றும் கருணாகரன் சீட்டு ஆடும் விதமாக வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில், அந்த படத்தின் நாயகி சுனைனா கமெண்டில் நன்றி தெரிவித்துள்ளார்.

காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமான சுனைனா, அதற்கு பிறகு சில படங்களில் மட்டுமே தலை காட்டினார். விஜய்யின் தெறி படத்தில் சின்ன ரோலில் நடித்த சுனைனா, தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் முக்கியமான ரோல் செய்த சுனைனா நடிப்பில் ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தாலே இது ஒரு கடத்தல் படம் தான் என்பது தெளிவாக தெரிகிறது. பணக்கார வீட்டுப் பெண் சுனைனாவை யாருக்காகவோ யோகி பாபு மற்றும் கருணாகரன் கடத்தி கட்டி வைத்துள்ளனர். கடத்த சொன்னவன் வருவானா, இல்லை சுனைனாவிற்கு இவர்கள் இருவரும் உதவுவார்களா என்கிற ரீதியில் படம் நகரும் என்பது யூகிக்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், சென்னை அளவில் #TRIP ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சுனைனாவின் ரசிகர்கள் இந்த படத்திற்காக மரண வெயிட்டிங் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisements

Next Post

சிவப்பு நிற ஆடையில்... "மீரா மிதுன்" இந்த மாதிரி டிரெஸ்சே போட மாட்டீங்களே.... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!!

Sat Jan 4 , 2020
சிவப்பு நிற ஆடையில் நடிகை மீரா மிதுனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்திமாறி ஆகிய படங்களில் நடித்தவர் மீரா மிதுன். சர்ச்சைகளுக்கும் இவருக்கும் அப்படியொரு பொருத்தம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர், அங்கிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பின் மீரா, விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் மீது பரபரப்பு புகார் கூறினார். இதனால் […]
%d bloggers like this: