மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் “த்ரிஷா” நடிப்பது உறுதி..!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து காடுகளில் நடக்கிறது. இதற்காக மணிரத்னம் தனது குழுவுடன் அங்கு சென்று லொகேஷன்களை பார்த்து வந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் தானும் இணைந்திருப்பதாக மலையாள நடிகர் லால் கூறியிருந்தார். ‘என் கனவு நனவாகியிருக்கிறது. இந்தப் படத்துக்காக குதிரை சவாரி பயிற்சி பெறுகிறேன்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் த்ரிஷாவும் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதைப் படக்குழு உறுதி செய்துள்ளது.

த்ரிஷா நடிப்பது உண்மைதான். அவர் என்னவாக நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ். ஆனால், முக்கியமான கேரக்டர். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் த்ரிஷா ஏற்கனவே நடித்திருந்தார். இப்போது அவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன் நடிப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அவர் நடிக்கவில்லை. படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் முடிவு செய்யப்பட்டுவிட்டார்கள். விரைவில் அறிவிப்பு வரும். படப்பிடிப்பு ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என்கிறது பொன்னியின் செல்வன் டீம்.

Advertisements

fogpriya

Next Post

சுசி லீக்ஸ் சர்ச்சை குறித்து மனம் திறந்த பாடகி சுசித்ரா..!

Thu Dec 5 , 2019
தனது விவாகரத்து மற்றும் சுசி லீக்ஸ் விவகாரம் குறித்து பாடகி சுசித்ரா மனம் திறந்து பேசியுள்ளார். ஆர்ஜே, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. இவரது துள்ளலான குரலுக்கு சொக்காதவர்களே இருக்க முடியாது. சினிமா வட்டாரத்தில் பெரும் நட்பு வட்டாரத்தை கொண்டிருந்தார் சுசித்ரா. இரவில் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தனது சினிமா நண்பர்களுடன் வாழ்க்கை கொண்டாடி கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2017 […]
%d bloggers like this: