60 படங்கள், 45 விருதுகள் “திரிஷா” -வின் 17 வது ஆண்டு திரையுலக கொண்டாட்டம்..!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிளில் ஓருவர் தான் திரிஷா.இவரது முழு பெயர் திரிஷா கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் இவர் மற்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார் திரிஷா. திரிஷா தனது திரையுலக வாழ்க்கையை 1999ல் துவங்கினார். பிரசாந்த் சிம்ரன் நடித்த ஜோடி எனும் படத்தில் சிம்ரனின் நண்பர்களில் ஒருவராக வருவார். பின்பு ஹீரோயின் ஆக நடித்த திரைப்படம் ஷாம் நடித்த லேசா லேசா இப்படம் ரிலீஸ் ஆக சிறிது காலம் ஆனது. ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் மெகா ஹிட் ஆன படம் எனக்கு 20 உனக்கு 18 அப்படத்தில் நடித்தார் இப்படமும் ரிலீஸ் சரியான நேரத்தில் ஆகவில்லை. அவர் நடித்து முதலில் வெளியான திரைப்படம் அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மெளனம் பேசியதே இப்படம் வசூல் ரிதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அவருக்கு மிகப்பெரிய மார்கெட்யை ஏற்படுத்திய திரைப்படம் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி இப்படத்தில் நடித்த கதாபாத்திரம் புவனா இன்றும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பின்பு மலையாளம் தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் நடித்தார் திரிஷா.தான் நடித்த முதல் தெலுங்கு திரைப்படத்திற்காக தனது முதல் பிலிம்பேர் விருதும் பெற்றார்.

பின்பு தமிழில் சினிமாவில் மெகாஹிட் பாடமான விஜய்யின் கில்லி படத்தில் நடித்தார் அதில் தனலட்சுமி என்னும் கதாபாத்திரம் அவருக்கு கன கச்சிதமாக பொருந்தியது அதிலும் அப்படத்தில் பிரகாஷ்ராஜ் செல்லம் என்று திரிஷாவை அழைத்தது இன்றும் கூட திரிஷாவை அப்படியே அழைக்கின்றனர். பின்பு மணிரத்தினம் படமான ஆயுத எழுத்தில் நடித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

சில வருடங்கள் இடைவெளியில் திரிஷா விற்கு தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு அமையவில்லை.பின் 96 எனும் படத்தில் நடித்து திரிஷா கம்பெக் கொடுத்தார். அப்படத்தில் வரும் ஜானு கதாபாத்திரம் மக்களிடையே அவரை கொண்டு சேர்த்தது. திரிஷாவை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள் என்பதற்கு இப்படம் ஒர் உதாரணம்.திரிஷா வின் திரை பயனம் இன்றுடன் 17 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

திரிஷா வின் 17 வது ஆண்டு திரையுலக கொண்டாட்டத்தில் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷம் படும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வந்துள்ளது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடிக்கிறார்.மற்றும் 2020 அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் அவருக்கான மார்க்கெட்யை உயர்த்தும். ஆந்திராவின் மெகா ஸ்டார் சீரஞ்சிவி உடனும். மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமான மோகன்லால் உடனும் நடிக்கிறார் திரிஷா.

Advertisements

fogpriya

Next Post

சர்ச்சை புகைப்படம்..! வெளியிட்ட 'தர்ஷன்'-க்கு ரசிகர்கள் அட்வைஸ்.!

Sat Dec 14 , 2019
கஞ்சா புகைப்பது போன்ற பிக் பாஸ் தர்ஷனின் புதிய நவீன அகோரி புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் ரியல் ஸ்டார் போட்டியாளர் தர்ஷன். ஆரம்பம் முதலே அவர் தான் டைட்டில் வின்னர் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அவரை வெளியே அனுப்பி, முகெனுக்கு டைட்டிலை கொடுத்தார் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே தர்ஷன் சில […]
%d bloggers like this: