“ஜடா” படம் பற்றி டிவிட்டர் விமர்சனம்..!

கதிர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜடா திரைப்படம் குறித்த விமர்சனங்கள் டிவிட்டரில் வெளியாகி வருகின்றன. நடிகர் கதிர், பரியேறும் பெருமாள், பிகில் படங்களை தொடர்ந்து நடித்திருக்கும் படம் ஜடா. இந்தப்படமும் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்நிலையில் இப்படம் ரிலீஸான அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் ஆன்லைனில் ரிலீஸ் செய்துவிட்டது.

இந்நிலையில் இப்படம் குறித்த கருத்துக்களை ரசிகர்கள் டிவிட்டர் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில் பிகில் படத்தை தொடர்ந்து இந்த படமும் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி வந்துள்ளதாகவும் ஆவி பேய் என பேய் படங்களையும் டச் செய்திருப்பதால் பல காட்சிகள் அலுப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

அதேபோல் கதிரிடம் விஜயின் மேனரிசம் தெரிவதாகவும் கூறியுள்ளனர். அதேநேரத்தில் படம் குறித்த கலவையான விமர்சனமும் எழுந்துள்ளது.

Advertisements

fogpriya

Next Post

அஜித்தின் "வலிமை" படத்தில் இணையும் நடிகை..!

Sat Dec 7 , 2019
தல அஜித் நடிக்கவுள்ள ’வலிமை’ திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததேஇந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வை இயக்குனர் வினோத் கிட்டத்தட்ட முடித்து விட்டதாகவே தெரிகிறது. அஜித் ஜோடியாக நயன்தாராவும் இன்னொரு முக்கிய கேரக்டர்களில் அருண் விஜய்யும் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி விரைவில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇந்த நிலையில் இந்த […]
%d bloggers like this: