‘வானம் கொட்டட்டும்’ படத்தின் “Easy Come Easy Go” வீடியோ பாடல் இதோ..!!

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, அமித்ஷா பிரதான்,  பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மணிரத்னம்  மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க அவர்களது மகனாக விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து வருகிற 2020 ஜனவரியில் இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இந்நிலையில் தற்போது “ஈசி கம் ஈசி கோ” என்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை சித் ஸ்ரீராம், சஞ்சீவ், தபஸ் நரேஷ் ஆகியோர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisements

Next Post

யோகிபாபுக்கு டும்டும்டும்....கல்யாண தேதியை அறிவித்துவிட்டார் யோகி பாபு..!! பிப்ரவரியில் திருமணமா?

Fri Jan 31 , 2020
தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு.  சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம் பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது […]
%d bloggers like this: