வைபவ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணையும் ‘ஆலம்பனா’ அப்டேட்..!

பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆலம்பனா’. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சந்துரு இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் பாரி.கே.விஜய் கதை எழுதி இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி மற்றும் இன்று நேற்று நாளை படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர். இந்த படத்தில் வைபவிற்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.

மேலும் முனிஷ்காந்த்,  பட்டிமன்ற பிரபலம் திண்டுக்கல் லியோனி, காளி வெங்கட், ஆனந்தராஜ், முரளி சர்மா, கபீர் துஹான் சிங்  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.வினோத் ரத்தினசாமி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டர் ஷான் லோகேஷ் இந்த படத்தின் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். இந்த படத்தின் பூஜை வருகிற டிசம்பர் 14 ஆம் தேதி சனிக்கிழமை எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது.

Advertisements

fogpriya

Next Post

சட்டையை கழட்டி முன்னழகை காட்டும் "ஸ்ருஷ்டி டாங்கே"..

Fri Dec 13 , 2019
மேகா படத்தில் புத்தம் புது காலை பாடலுக்கு அழகாக நடனமாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேரன் நடிப்பில் வெளியாகவுள்ள ராஜாவுக்கு செக் படத்தில் நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே அந்த படத்தை புரொமோட் செய்யும் விதமாக படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சட்டையை கழட்டி முன்னழகு தெரியும் படி அவர் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு […]

Actress HD Images

%d bloggers like this: