66-வது ‘தேசிய’ திரைப்பட விருதுகளை வழங்கினார் “வெங்கய்ய நாயுடு”..!

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தில்லியில் இன்று நடைபெற்றது. விக்யான் பவனில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருதுகளை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வழங்கினார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் பங்கேற்றார்.

இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயா்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் தோவு செய்யப்பட்டாா்.

சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வானது. சிறந்த ஹிந்திப் படமாக அந்தாதுன் தேர்வானது. கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது. மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தேசிய விருதுகளை குடியரசுத் தலைவா் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை அளித்துள்ளார். விருதுகளை பெற்றவா்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேநீா் விருந்து அளிக்கவுள்ளாா். கடந்த ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது. முதல் கட்டமாக மத்திய அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, ராஜ்யவா்தன் சிங் ராத்தோா் ஆகியோரும், இரண்டாவது கட்டமாக ராம்நாத் கோவிந்தும் வழங்கினா்.

தேசிய விருதுப் பட்டியல்:

சிறந்த படம் – எல்லாரு (குஜராத்தி)
சிறந்த இயக்குநர் – ஆதித்யா தர் (உரி, ஹிந்தி)
சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (மகாநடி, தெலுங்கு)
சிறந்த நடிகர் – ஆயுஷ்மா குரானா (அந்தாதுன், ஹிந்தி), விக்கி கெளசல் (உரி, ஹிந்தி)
சிறந்த அறிமுக இயக்குநர் – சுதாகர் ரெட்டி (மராத்தி)
நர்கீஸ் தத் தேசிய ஒருமைப்பாடு விருது – ஒண்டல்லா இரடல்லா (கன்னடம்)
சிறந்த பொழுதுபோக்குப் படம் – பதாய் ஹோ (ஹிந்தி)
சமூக நலனுக்கான சிறந்த படம் – பேட்மேன் (ஹிந்தி)
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் – பானி (மராத்தி)
சிறந்த துணை நடிகர் – ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக், மராத்தி)
சிறந்த துணை நடிகை – சுரேகா சிக்ரி (பதாய் ஹோ, ஹிந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – பிவி ரோஹித் (கன்னடம்), சமீப் சிங் (பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரேஷி (உருது), ஸ்ரீனிவாஸ் போக்லே (மராத்தி)
சிறந்த பாடகர் – அர்ஜித் சிங் (பத்மாவத், ஹிந்தி)
சிறந்த பாடகி – பிந்து மாலினி (நதிசரமி, கன்னடம்)
சிறந்த வசனம் – தரிக் (வங்காளம்)
சிறந்த திரைக்கதை (தழுவல்) – அந்தாதுன்
சிறந்த அசல் திரைக்கதை – சி அர்ஜூன் லா சோ (தெலுங்கு), அந்தாதுன் (ஹிந்தி), தரிக் (வங்காளம்)
சிறந்த ஒலி அமைப்பு – டெண்ட்லியா (மராத்தி), உரி (ஹிந்தி), ரங்கஸ்தலம் (தெலுங்கு)
சிறந்த படத்தொகுப்பு – நதிசரமி (கன்னடம்)
சிறந்த கலை இயக்கம் – கம்மர சம்பவம் (மலையாளம்)
சிறந்த ஒப்பனை – ஏவ் (தெலுங்கு)
சிறந்த இசையமைப்பாளர் – சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத், ஹிந்தி)

சிறந்த பின்னணி இசை – ஷஸ்வத் சச்தேவ் (உரி, ஹிந்தி)
சிறந்த பாடலாசிரியர் – மனசோர் (நதிசரமி, கன்னடம்)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – ஆவ் (தெலுங்கு), கேஜிஎஃப் (கன்னடம்)
சிறந்த நடனம் – க்ருதி மஹேஷ், ஜோதி டி தொம்மார் (பத்மாவதி, ஹிந்தி)
திரையுலகுக்கு ஏற்ற மாநிலம் – உத்தராகண்ட்
சிறப்பு விருதுகள்: ஹெல்லாரோ (குஜராத்தி), கெடாரா (வங்காளம்), ஸ்ருதி ஹரிஹரன் (கன்னடம்), சந்திரசூர் ராய் (ஹிந்தி), ஜோஜோ ஜார்ஜ் (மலையாளம்), சாவித்ரி (மலையாளம்)

சிறந்த ஆடை வடிவமைப்பு: மகாநடி (தெலுங்கு)

சிறந்த சண்டை இயக்கம் – கேஜிஎஃப் (கன்னடம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: எம்.ஜே. ராதாகிருஷ்ணன் (மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம் சர்காரி…((SARKARI HIRIYA PRATHAMIKA SHALE KASARGODU, கன்னடம்)


Advertisements

fogpriya

Next Post

"விஜய்" வசனத்தை பேசிய ராதிகா..!

Tue Dec 24 , 2019
இளைய தளபதி விஜய் பெயரை சொன்னாலும் அல்லது விஜய் பேசிய வசனத்தை பேசினாலும் எந்த ஒரு அரங்கமும் அதிரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அனைத்து இடங்களிலும் விஜய் ரசிகர்கள் பரவி உள்ளனர்இந்த நிலையில் கலர்ஸ் டிவியில் நடிகை ராதிகா கோடிஸ்வரி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது இந்த நிலையில் நேற்று இந்த […]

Actress HD Images

%d bloggers like this: