சூர்யா40 லேட்டஸ்ட் அப்டேட்.. மீண்டும் நாவல் கதையை எடுக்கும் வெற்றிமாறன்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்தின் மூலக்கதை எடுக்கப்பட்ட நாவல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்து அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் அசுரன். இப்படத்தில் கென் கருனாஸ், டீஜே அருணாசலம், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, இயக்குனர் பாலஜி சக்திவேல், வேல்ராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட்டானது.
அதையடுத்து, இயக்குனர் வெற்றிமாறன் விஜயுடன் இணையவுள்ளதாகப் பேசப்பட்டு வந்த நிலையில், சூர்யாவின் 40-வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என கலைப்புலி எஸ். தானு வெளியிட்ட அறிவிப்பின் மூலம் உறுதியானது.

இந்நிலையில், இப்படமும் நாவலைத் தழுவிய படம் என உறுதி செய்துள்ளார் வெற்றிமாறன். ஆம், இப்படம் மீரான் மைதீன் எழுதிய ‘அஜ்னபி’ எனும் நாவலை தழுவி தான் எடுக்கப்படவுள்ளதாம். முதல் முறையாக வெற்றிமாறன் – சூர்யா இடையேயான இந்த மாறுபட்ட கூட்டணியின் படைப்பின் மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் முன்னதாக இயக்கிய ‘விசாரணை’ திரைப்படமும் ‘லாக்கப்’ எனும் நாவலைத் தழுவியது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

துப்பறிவாளன்2 படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு முடிவடைந்து.. புத்தாண்டை கொண்டாட "அமெரிக்கா" பறந்தார்.. நடிகர் விஷால்..!!!

Mon Dec 30 , 2019
கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளார் விஷால். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், துப்பறிவாளன் 2 படத்தின் முதல் லெக் முடிவடைந்து இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் . நடிகர் விஷால் அயோக்யா மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு பிறகு நடித்து வரும் படம்தான் துப்பறிவாளன் 2 .இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முடிந்ததால் தற்போது […]

Actress HD Images

%d bloggers like this: