வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்நிலையில்,  படத்தின் பெயரை வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.

சூர்யா நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியாகியது. அத்தோடு, ‘அசுரன்’ படத்தை தொடர்ந்து ஷாருக்கானுடன் ஒரு இந்திப்படத்தில் இணைவதாகவும்,மேலும் விஜய், சூர்யாவுடன் வெற்றிமாறன் இணைகிறார் எனவும் தகவல் இணையத்தில் கசிந்தது. இதற்கிடையே நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்குகிறார் எனவும் அறிவிப்பு வெளியாகியது.

இந்த  தகவல்கள் எவையும்  உறுதிப்படுத்தப்படாத நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்பதை தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணு உறுதி செய்தார். இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார். படத்திற்கு ஜல்லிக்கட்டுடன் தொடர்புடைய ‘வாடிவாசல்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நடிகர் சூர்யா ‘என்.ஜி.கே’, ‘காப்பான்’, ‘சூரரை போற்று’ படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணு தயாரிப்பில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

"பட்டாஸ்" படத்தின் மில்க் ப்யூட்டி இவங்கதான்.. வைரலாகும் 'மெஹ்ரின் பிர்ஸடா'-வின் க்யூட் போட்டோ...!

Mon Jan 13 , 2020
பட்டாஸ் நடிகை மெஹ்ரின் பிர்ஸடா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் டபுள் ஆக்‌ஷனில் கலக்கவுள்ள பட்டாஸ் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை மெஹ்ரின் பிர்ஸடா நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களை கவர, தனது க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வசீகரித்து வருகிறார். டோலிவுட்டில் […]
%d bloggers like this: