வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்..!ஒரே செல்ஃபி.!

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் ப்ரெக் அப் புறளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்கி. நானும் ரௌடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதிலிருந்து, நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் மிகவும் நெருக்கமாக பழகிவருகின்றனர். இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், அதனை உறுதி செய்யும் விதமாக, வெளிநாடு, கோவில், சுற்றுளா, விருது விழா என எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாகவே செல்வது மற்றும் மிக நெருக்கமான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் நயன்தாரா தனியாக வந்து கலந்துகொண்டுள்ளார். கிறிஸ்மஸ் நாளன்று இணையத்தில் இருவரும் ஜோடியாக நெருக்கமான ஃபோட்டோக்களைப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர், ஆனால் திடீரென நயன் மட்டும் தனியாக விழாவுக்கு வந்தது ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பிய நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஷிவன் இடையிலான காதல் முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகின. இச்செய்தி, பட்டித்தொட்டியெங்கும் பறவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த செய்தி தொடர்பாக ரசிகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், இது போன்ற புறளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது விக்கியுடன் நயன்தாரா நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தான் அது. விருது விழாவுக்கு புறப்படும் முன் அதே புடவையில் விக்கியுடன் நயந்தாரா செல்ஃபி எடுத்துவிட்டு தான் சென்றுள்ளார்.

Advertisements

Next Post

பச்சை நிற உடையில் போட்டோ ஷூட் நடத்திய திஷா பதானி...!பட்டையை கிளப்பும் புகைப்படங்கள்...

Thu Jan 9 , 2020
நடிகை திஷா பாட்னி பாலிவுட் சினிமாவின் முன்னணி  நடிகைகளில் ஒருவர் இவர் தற்பொழுது பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்,  சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற படத்தின் மூலம் தமிழில் முதல் முறையாக அறிமுகமாக இருந்தார். ஆனால் அவரின்  பேட் லக் இன்னும் படபிடிப்பு ஆரம்பிக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது,   நடிகை disha patani சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் தனது ரசிகர்களை தனது […]

Actress HD Images

%d bloggers like this: