டிவிட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்.. ட்ரென்ட்டாகும் “தளபதி64” அப்டேட்..!!

விஜயின் 64வது படத்தின் அப்டேட்டை தொடர்ந்து டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் புதிய கூட்டணியில் உருவாகி வரும் படம் தளபதி 64. இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். விஜயின் 64வது படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.அதன்படி தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டுக்காக காலை முதலே காத்திருந்த விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இதற்காக #Thalapathy64update, #Thalapathy64FirstLook ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரென்ட்டிங்கில் உள்ளன. சாமியாட தயாராகுங்கள்.. டிசம்பர் 31ஆம் தேதி 5 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்.. அடுத்த சம்பவம்.. நாம வச்ச ரெக்கார்ட்ஸ நாமலே தட்டி தூக்குவோம் என்று நெட்டிசன்ஸ் கூறிவருகின்றனர்.

Advertisements

Next Post

சீரியல் நடிகை மகாலட்சுமி ஈஸ்வர் கள்ளக்காதல் விவகாரம்.. தேவதையைக் கண்டேன் சீரியலை முடிக்க முடிவு? தீயாய் பரவும் தகவல்..!

Sun Dec 29 , 2019
 சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் சீரியல் நடிகர் தொடர்பான விவகாரத்தில் சீரியலையே முடித்து விட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வம்சம் சீரியலில் வில்லியாக நடித்த ஜெயஸ்ரீ, தனது கணவரும் சீரியல் நடிகருமான ஈஸ்வருக்கும், சீரியல் நடிகையான மகாலட்சுமிக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதற்காக ஈஸ்வர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் ஜெயஸ்ரீ போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஈஸ்வர் கைது […]

Actress HD Images

Advertisements