விஜய்27 வருட காமன் டீபியை வெளியிட்ட மோகன் ராஜா..!

டிசம்பர் 4, 1992 அன்று வெளியானது நாளைய தீர்ப்பு படம் ,அந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் ,இயக்குனர் மகன் என்பதால் வாய்ப்பு கிடைத்தது என்று பலரும் கேலி பேச தொடர் தோல்விகளையே முதலில் விஜய் சந்தித்தார் ,1996ல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படம் தான் விஜய்க்கு முதல் ஹிட் ,அதன் பின் விஜய்க்கு தோல்விகளை எப்படி தாண்டி வருவது என்பதை உணர்ந்தவராகினார் . 90கள் இறுதியில் சில வெற்றி படங்களுடன் 2000த்திற்கு நுழைந்தது முதல் அதன் பின் அவரின் ஒவ்வொரு படங்களும் திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது ,ஒரு நேரத்தில் விஜய் படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு இணையான வெற்றியை பெற்றது. அப்போது சூழலில் விஜய் தான் தமிழ் சினிமாவின் சிம்ம சொப்பனம் ,விஜயின் கில்லி படமெல்லாம் ஒரு வருடம் ஓடியது .

இதே நேரத்தில் விஜயின் மார்க்கெட் தமிழ்நாட்டில் இருந்த அதே அளவிற்கு கேரளாவிலும் பெருகியது ,கேரளாவில் விஜய்க்கு அங்கு உள்ள பெரிய ஹீரோக்களுக்கு நிகரான ஓப்பனிங் கிடைத்தது .மேலும் இங்கு ஓரளவுக்கு வெற்றி பெற்ற வேலாயுதம் படம் கேரளாவில் நூறு நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்தது .இவ்வளவு பெரிய மார்க்கெட் இருந்தும் விஜய் இதுவரையில் நேரடி மலையாள படம் ஒன்றில் கூட நடித்தது இல்லை . இந்நிலையில் இடையில் சில வருடங்கள் விஜய் படங்கள் தோல்விகளை சந்தித்தாலும் ,அதிலிருந்து விஜய் தனது விடாமுயற்சி காரணமாக மீண்டு வந்தார் .இதன் பின் விஜயை ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று விமர்சித்த ஊடகங்கள் அவரின் வளர்ச்சியை கண்டு இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கருத்தை தெரிவித்தது .விஜய் மேடைகளில் நாகரீக முறையில் தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார் . தற்போது விஜயின் படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங் வேறு எந்த ஹீரோவுக்கும் தமிழ்சினிமாவில் கிடையாது என்றே சொல்லலாம். இப்படி உட்சநட்சத்திரமாக வளர்ந்து உள்ள விஜய் சினிமாவில் கால் பதித்து டிசம்பர் நான்கோடு 27 வருடங்கள் ஆகின்றன .இதனை கொண்டாடும் வகையில் மோகன் ராஜா விஜய் ரசிகர்களின் சார்பில் உருவாக்கப்பட்ட ‘காமன்டீபி’யை ரிலீஸ் செய்துள்ளார் .விஜயும் மோகன் ராஜாவும் வேலாயுதம் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைய தளபதி , தளபதியாக மாறி பல ரசிகர்களின் மனதில் அதிபதியாக இருக்கும் விஜய் நல்ல நல்ல படங்களை கொடுக்க வேண்டும். பல புதிய சாதனைகள் செய்ய வேண்டும்.

Advertisements

fogpriya

Next Post

வலிமை படத்தில் ஒரு தல இல்லையாம்.. இரண்டு தலயாம்..!

Tue Dec 3 , 2019
வலிமை படத்தில் அஜீத் இரண்டு கெட்டப்பில் வருகிறாராம். அதுதான் இப்போது லேட்டஸ்ட் செய்தி. அஜீத் ரசிகர்கள் அடுத்து ஆவலுடன் எதிர்பார்த்துள்ள படம் வலிமை. தல இதில் எப்படி அதகளம் செய்யப் போகிறார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் படத்தில் அஜீத் 2 கெட்டப்பில் வருவதாக பேச்சு அடிபடுகிறது. அதற்கேற்ப ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ஷார்ட் கட்டோடு, இறக்கிய மீசையுடன் ஒரு அஜீத், இன்னொரு கெட்டப்பில் ஒரு […]

Actress HD Images

%d bloggers like this: