ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு!! என்ன குழந்தை தெரியுமா ?

சீரியல் நடிகர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. அதனால் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்திருந்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் திருமணம் ரகசியமாக நடந்தாலும் சில மாதங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

ஆல்யா மானசா கர்ப்பமாக இருந்தார். அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை அதிகாரபூர்வமாக இன்ஸ்டாகிராமில் சஞ்சீவ் அறிவித்துள்ளார்.

“எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். உங்களின் ஆசீர்வாதம் வேண்டும். தாய் மற்றும் மகள் இருவரும் நன்றாக இருக்கின்றனர்.பாப்பு குட்டிக்கு குட்டி பாப்பு குட்டி” என குழந்தையா பற்றி மகிழ்ச்சியாக பேசியுள்ளார் சஞ்சீவ்.

இதனால் ரசிகர்கள் தற்போது சஞ்சீவ் அல்யா மானசா ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சில நாட்கள் முன்பு சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் ஒரு புதிய BMW காரை வாங்கியுள்ளனர். அது பற்றி மகிழ்ச்சியாக ஆல்யா மானசா இன்ஸ்டாகிராமில் பேசியிருந்தார்.

“Totally excited. எங்கள் வாழ்க்கையில் அடுத்த பெரிய படி இது” கூறி சஞ்சீவுக்கு நன்றி கூறியிருந்தார் ஆல்யா மானசா.

Advertisements

Next Post

பிரபல இந்தி பாடகிக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Sat Mar 21 , 2020
பாலிவுட் பட பின்னணிப் பாடகி கனிகா கபூருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவருடன் விருந்தில் கலந்துகொண்ட வசுந்தரா ராஜே, துஷ்யந்த் ஆகியோர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார். வெளிநாட்டிலிருந்து திரும்பிய கனிகா, லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், ராஜஸ்தான் மாநில […]
%d bloggers like this: