நடிகை மதுமிதாவுக்கும், தனியார் தொலைக்காட்சிக்கும் இடையே மோதல்?

தன் மீது தனியார் தொலைக்காட்சி அளித்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக நடிகை மதுமிதா கூறியுள்ளார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, காவிரி பிரச்சனை தொடர்பான வாக்குவாதத்தில் தன்னை காயப்படுத்திக் கொண்டதாகக் கூறி 50 நாட்களிலேயே வெளியேற்றப்பட்டார்.

ஒப்பந்தப்படி மதுமிதாவுக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், மீத பணத்தை சில நாட்களில் கொடுப்பதென பேசி முடிவெடுத்து இருந்ததாகவும் தொலைக்காட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த தொலைக்காட்சியின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் என்பவர் கிண்டி காவல் நிலையத்தில் மதுமிதாவுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 19ஆம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, மதுமிதா, தனது குரல் பதிவை அனுப்பி வைத்து நிலுவைத் தொகையை உடனடியாக கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

புகாரை பெற்றுக் கொண்ட கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தன் மீதான புகார் குறித்து மதுமிதா விளக்கமளித்துள்ளார். அதன்படி, அந்தத் தொலைக்காட்சி தனக்கு பாக்கிப் பணம் தர வேண்டும் என்று கூறி இருப்பது உண்மை தான் என்று தெரிவித்தார்.

ஒப்பந்தம் போட்டிருப்பதால் தற்போது எதையும் கூற முடியாது என்று கூறிய அவர், புகாரை சட்டரீதியாக எதிர் கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டார். 

Advertisements

Next Post

சிக்குவாரா சிதம்பரம்? உச்சநீதிமன்றத்தின் கையில் முடிவு

Wed Aug 21 , 2019
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன் ஜாமின் மறுக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.  ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனமானது 2007ஆம் ஆண்டில் மொரிசியஸ் நாட்டின் மூன்று நிறுவனங்களிடம் இருந்து அந்நிய நேரடி முதலீடாக 305 கோடி ரூபாய் பெற்றதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்நிய முதலீட்டைப் பெற்றுக் கொடுக்க அப்போது நிதி […]
%d bloggers like this: