விஜய்க்காக தயாராகும் கர்நாடகா மாநில சிறை..!

விஜய், மாளவிகா மேனன் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய சிறைச்சாலையில் நடத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதி கர்நாடக மாநில அரசிடமிருந்து பெறப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும் ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்கும் படக்குழுவினர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் கர்நாடக மாநில சிறைச்சாலையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சிறைச்சாலையில் விஜய் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடத்தப்படுவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசு செய்து தர ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Advertisements

fogpriya

Next Post

பிரபல குணசித்திர நடிகர் காலமானார். சோகத்தில் திரையுலகம்..!

Wed Nov 27 , 2019
தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவரும், மேடை நாடகக் கலைஞருமானா பாலா சிங் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67 நாசர் நடித்து இயக்கிய `அவதாரம்’ படத்தில் வில்லன் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் பாலாசிங் அதன் பின்னர் `புதுப்பேட்டை’, `விருமாண்டி’ இந்தியன், ராசி, மறுமலர்ச்சி, தீனா, உள்பட பல திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் […]

Actress HD Images

%d bloggers like this: