“கோப்ரா” இறுதி கட்ட படப்பிடிப்பில் சிக்கல்… கடுப்பான நடிகர் விக்ரம்..!!

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் தன்னை ரசிக்க வைத்த பெருமை விக்ரமுக்கு உண்டு. அனைவருக்குமே விக்ரமை பிடிக்கும். இவரது நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்.

அந்த வகையில் தற்போது டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவில் க்ளைமேக்ஸ் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கும் அஜய் ஞானமுத்து அதற்கான அனுமதியை பெறுவதில் தாமதம் செய்து வருகிறாராம். இதனால் விக்ரம் தரப்பு கொஞ்சமா செட்டில் இருப்பதாக தெரிகிறது.

விரைவில் கோப்ரா படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டியிருப்பதால் அந்தப்படமும் தாமதமாக வாய்ப்பு இருக்கும் எனக்கருதி அஜய் ஞானமுத்துவை விரைவில் கோப்ரா படத்தின் பணிகளை முடிக்குமாறு விக்ரம் கட்டளையிட்டுள்ளார்.

கோப்ரா படத்தின் பெரும்பாலான காட்சிகள் கல்கத்தாவில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லலித்குமார் தயாரித்து வருகிறார்.

Advertisements

Next Post

தனது ஓய்வு காலத்தையும் மீறி மீண்டும் ஆஸ்திரேலியாயுடன் களமிறங்கும் சச்சின் டெண்டுல்கர்…!

Sat Feb 8 , 2020
உலக கிரிக்கெட் கலாச்சாரத்தின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தற்போது கிரிக்கெட் விமர்சகராக பணியாற்றிவருகிறார். ஆஸ்திரேலியா காட்டுத்தீயிற்கு நிதித் திரட்டுவதற்காக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் பாண்டிங் தலைமையில் விளையாடவிருக்கும் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றவுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் ஆல் ரவுண்டர் வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி சச்சினிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். சச்சின் ஒருமுரையாவது அவர்களுடன் இணைந்து விளையாடவேண்டுமென்று விடுத்த கோரிக்கையை சச்சின் டெண்டுல்கர் […]

Actress HD Images

%d bloggers like this: