விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி ரூ.47 லட்சம் மோசடி? – புகாரை அளித்தவர் யாரென்றே தெரியாது: வடிவுடையான்

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி 47 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டு புகாரை, இயக்குநர் வடிவுடையான் மறுத்திருக்கிறார்.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாரி, பொட்டு, செளகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரான இயக்குனர் வடிவுடையான் மீது புகார் அளித்தார்.

கடந்த 2016ல் தன்னை அணுகிய இயக்குநர் வடிவுடையான் 7 கோடி ரூபாய் செலவில், நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி, 3 தவணைகளில், 47 லட்ச ரூபாய் பெற்றதோடு, படத்தையும் இயக்காமல், பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டதாக நரேஷ் கோத்தாரி கூறியுள்ளார்.

இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்திருக்கும் இயக்குநர் வடிவுடையான், தமக்கு சுரேஷ் கோத்தாரி, யார் என்றே தெரியாது என்றும், அவருக்கும் தமக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

கடந்தாண்டு 3 லட்ச ரூபாய் கடனுக்காக அசோக் லோதா என்பவரிடம், நிரப்பப்படாத காசோலை, கையெழுத்திட்ட பத்திரம் ஆகியவற்றை அளித்ததாகவும், பணத்தை திருப்பி செலுத்திய பின்னர், அவற்றை அவர் தராததால், சென்னை 6ஆவது நகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும்,கூறியிருக்கிறார்.

இதனால் கோபமடைந்த அசோக் லோதா, சுரேஷ் கோத்தாரி மூலம் தன் மீது புகார் அளித்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாக, இயக்குநர் வடிவுடையான் தெரிவித்திருக்கிறார்.

Advertisements

Next Post

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும், ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்வு

Thu Aug 22 , 2019
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அதிலும் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்ற,  ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை, தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு […]
%d bloggers like this: