” துப்பறிவாளன் 2″ படம் குறித்த சில தகவல்..!

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிய ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அவருடைய அடுத்த படமான ’சக்ரா’ என்ற படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கும் இந்தப் படத்தில் ஷராதா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய மூன்று நாயகிகள்நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் விஷால் தற்போது நடித்து கொண்டிருக்கும் ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்
விஷாலுடன் பிரசன்னா, நந்தா மற்ற முக்கிய வேடம் ஒன்றில் கவுதமி நடிக்கும் இந்த படத்தில் மிரட்டலான வில்லன் கேரக்டரில் மிஷ்கின் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
’துப்பறிவாளன் முதல் பாக படத்தை விட இருமடங்கு விறுவிறுப்புடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதே கணியன் பூங்குன்றனார் தான் இந்த படத்திலும் ஒரு முக்கிய வழக்கை துப்பறிகிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச்-ல் முடிந்துவிடும் என்றும் ஜூலை மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisements

fogpriya

Next Post

"ஸ்விம்மிங்" சூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராய் லட்சுமி..!

Mon Dec 23 , 2019
2005ல் தமிழில் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. இவர் அதற்கு பிறகு குண்டக்க மண்டக்க, மங்காத்தா ,அரண்மனை, நீயா 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார் . இவர் கடந்த ஆண்டு இந்தியில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தனது புதிய ஸ்விம்மிங் சூட் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். Advertisements
%d bloggers like this: