‘உயிருக்குயிரான காதல்’ சந்தேகத்தினால் விவாகரத்தில் முடிந்தது..மனம் திறந்த பிரபல நடிகர்..!

தனது காதல் மனைவியை விவாகரத்து செய்ததன் காரணம் என்ன என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் மனம் திறந்து பேசியுள்ளார். கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால், 2009ஆம் ஆண்டு ரிலீஸான இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. அண்மையில் அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது.

சிறப்பான கதைளை தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷாலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விஷாலுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாகவும், காதல் ஒன்றே என் வாழ்க்கையில் உண்மையானதாக இருந்ததாகவும் கூறினார்.மேலும் சில நாட்களுக்கு முன்பு வரை நான் இவ்வளவு பேசும் ஆள் கிடையாது. மிகவும் அமைதியான ஆளாகதான் இருந்தேன். ஆனால் அந்த அமைதியால் நடிப்பில் என்னால் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சக நடிகர்கள் நடிகைகளுடன் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

திரைப்படங்களில் காதல் காட்சிகள் போன்றவற்றில் இயல்பாக நடிப்பதற்காக நடிகைகளிடம் சகஜமாக பேசி பழகினேன். ஆனால் இதுவே சந்தேகமாக மாறி என் திருமண வாழ்வில் விவாகரத்து வரை செல்லும் என்று நினைக்கவில்லை. மேலும் என்னுடைய மகன் மற்றும் மனைவியின் நலனுக்காக மட்டுமே விவாகரத்து பெற்றிருக்கிறேன் என்று கூறினார். விஷ்ணு விஷால் – ரஜினி தம்பதிக்கு ஆரியன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

விவாகரத்துக்கு பிறகு விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாகவும் அவரை காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. அண்மையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

சினுங்கும் அழகி "அதுல்யா ரவி" கவிதை எழுதும் ரசிகர்கள்..!

Mon Dec 9 , 2019
அதுல்யா என்றால் அழகு அழகு என்றால் அதுல்யா என்று கவிதை எழுதும் வருகின்றனர் அவரின் இணைய ரசிகர்கள். இன்ஸ்டாகிராமில் 13 லட்சம் பார்வையாளர்கள் இவரை பின்தொடருகின்றனர். ட்விட்டரில் சுமார் இரண்டாரை லட்சம் ஃபாளவர்கள் இருக்கிறார்கள். காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா. அந்தபடத்தின் எதார்த்தமான நடிப்பாலும், துருதுரு பார்வையாலும் இவர் பிரபலமானார். இன்றைய சினிமா உலகில் புகழ்பெற வேண்டும் என்றால், இணையத்தில் பிரபலமடைய வேண்டும். அதே போல […]

Actress HD Images

%d bloggers like this: