விக்னேஷ் சிவனுக்கு இரண்டு ஆண்டுகள் என்ன ஆச்சு.. அடுத்த படம் ட்ராப்பா? .. கம்பேக் ஆவாரா?அவரது ரசிகர்கள் கேள்வி?

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்னும் புதிதாக எந்த படத்தையும் இயக்க ஆரம்பிக்கவில்லை. சிவகார்த்திகேயனுடன் விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்று செய்கிறார் என்ற அப்டேட் வெளியான நிலையில், தற்போது அந்த படமும் ட்ராப் என்ற தகவல்கள் பரவி வருகிறது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட நெற்றிக்கண் திரைப்படமும் மூக்குத்தி அம்மன் படத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான தானா சேர்ந்த கூட்டம் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. அதற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவொரு புதிய படத்தையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடங்கவில்லை. சிம்புவின் போடா போடி, விஜய்சேதுபதியின் நானும் ரெளடி தான், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் என பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி வந்த விக்னேஷ் சிவன் ஏன் இன்னும் தனது அடுத்த படத்தை தொடங்காமல் இருக்கிறார் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் இயக்கத்தில் புதுப்படம் உருவாகும் என அண்மையில் செய்திகள் வெளியாகின. ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படமும் டிராப் ஆனதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள பெரிய பட்ஜெட் லவ் ஸ்டோரிக்கு ஆரம்பத்தில் ஓகே சொன்ன லைகா நிறுவனம், தற்போது தயாரிக்க மறுத்துள்ளதாம். மற்றொரு தயாரிப்பு நிறுவனமும் இந்த படத்தை தயாரிக்க முன் வராமல் போன நிலையில், அந்த கதையை டிராப் செய்து விட்டு மீடியம் பட்ஜெட் கதையை எழுத விக்னேஷ் திட்டமிட்டு வருகிறாராம்.

நடிகை நயன்தாராவை 4 ஆண்டுகளாக காதலித்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன், அவ்வப்போது நடிகை நயன்தாராவுடன் கொண்டாடும் புகைப்படங்களை தவறாமல் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. காதலில் மூழ்கி இருக்கும் விக்னேஷ் சிவன், தனது ரசிகர்களுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவனாக விரைவில் கம்பேக் ஆவாரா என அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விரைவில் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

Advertisements

Next Post

டிவிட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்.. ட்ரென்ட்டாகும் "தளபதி64" அப்டேட்..!!

Sun Dec 29 , 2019
விஜயின் 64வது படத்தின் அப்டேட்டை தொடர்ந்து டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் புதிய கூட்டணியில் உருவாகி வரும் படம் தளபதி 64. இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். விஜயின் 64வது படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.அதன்படி தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 31ஆம் தேதி மாலை […]
%d bloggers like this: