நடிகை நயன்தாரா-வுக்கு அந்த பெயரை வச்சது யாரு?.. இதற்கெல்லாம் சண்டை போடும் இயக்குனர்கள்..!!

நடிகை நயன்தாராவுக்கு அந்தப் பெயரை வைத்தது யார் என்று இயக்குனர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. மனசினக்கரே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவரது ஒரிஜினல் பெயர், டயானா மரியம் குரியன். இதையடுத்து ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சந்திரமுகி, கஜினி என்று அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடிக்க, இன்று தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின். இந்நிலையில், நயன்தாரா என்ற பெயரை அவருக்கு வைத்தது, நான்தான் என்று இயக்குனர் ஒருவர் சொல்ல, அதை நயன்தாராவின் முதல் பட இயக்குனர் சத்யன் அந்திக்காடு மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சகபாடி 1975 என்ற மலையாளப் படத்தை இயக்கியவர் ஜான் டிட்டோ.

இவர், நயன்தாரா என்ற பெயரை அவருக்கு சிபாரிசு செய்தது நான் தான் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘அது 2003 ஆம் ஆண்டு, நான் ஏ.கே.சஜனிடம் ஸ்கிரிப்ட் அசிஸ்டென்டாக பணியாற்றினேன். கதை ஒன்றுக்காக இருவரும் கெஸ்ட் ஹவுஸில் இருந்தோம். அப்போது புகழ்பெற்ற ஸ்டில் போட்டோகிராபர் சுவாமிநாதன் என்பவர் வந்தார். அப்போது சத்யன் அந்திக்காடு இயக்கும் படத்தின் ஷூட்டிங் இருக்கிறது. ஹீரோயின் புதிது. அவர் பெயர் டயானா. அவருக்கு வேறு நல்ல பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார். உடனே, ‘டிட்டோ ஒரு நல்ல பெயரை சொல்லேன்’ என்றார் சஜன் சார். சிறிது யோசனைக்குப் பிறகு நான் சொன்ன பெயர்தான் நயன்தாரா. சுவாமிநாதன் அதை குறித்துக் கொண்டார்.

பிறகுதான் சத்யன் அந்திக்காடு ‘மனசினக்கரே’ படத்தில் ஹீரோயின் பெயர் நயன்தாரா என்று அறிவித்தார். நயன்தாரா என்று பெயர் சொன்ன நான் இப்போது முழுமையாக தோல்வி அடைந்து வீட்டில் இருக்கிறேன். இது எதுவும் தெரியாமல் அவர் ரஜினிகாந்துக்கு ஹீரோயின் ஆகி இருக்கிறார். எப்போதாவது அவரைச் சந்தித்தால் இதைச் சொல்வேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால், டிட்டோவின் இந்த விஷயத்தை மறுத்திருக்கிறார் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. அவர் கூறும்போது, ‘டிட்டோ என்பவரை யாரென்றே எனக்குத் தெரியாது. நயன்தாரா என்ற பெயரை எனக்கு சிபாரிசு செய்தது மனசினக்கரே படத்தின் ரைட்டர் ரஞ்சன் பிரமோத். ஒரு நாள் காலையில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, ரஞ்சன் பிரமோத்தும் நானும் சில பெயர்களை எழுதி வைத்திருந்தோம்.

அதில், நயன்தாரா என்ற பெயரையும் எழுதியிருந்தோம். அந்த லிஸ்டில் இருந்து நயன்தாராவை தேர்வு செய்தது நயன்தாராதான். இது அப்போது படப்பிடிப்பில் இருந்த எல்லோருக்கும் தெரியும். இப்போது எதுக்கு இந்த பிரச்னை என்று தெரியவில்லை. வீண் விவாதங்கள் தேவையில்லை. இதுதான் உண்மை என்று தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னை மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Next Post

அருண் விஜய் நடித்துள்ள "மாஃபியா" ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Sun Jan 26 , 2020
அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் அருண் விஜய்யை நாயகனாக வைத்து மாஃபியா படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் […]

Actress HD Images

%d bloggers like this: