ஜெயலலிதாவாக ரம்யா..! அப்ப சசிகலா யாரு? என்ன சொல்கிறார் இயக்குனர்..?

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான குயின் வெப் சீரிஸில், சசிகலாவாக நடிப்பது யார் என்பதை இயக்குனர் பிரசாத் முருகேசன் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை மூன்று பேர் இயக்கி வருகின்றனர். விஜய் இயக்கும் தலைவியில் கங்கனா ரனவத்தும், பிரியதர்ஷினியின் அயர்ன் லேடியில் நித்யா மேனனும் ஜெயலலிதாவாக நடித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கவுதம் வாசுதேவ் மேனனும் ‘கிடாரி’பிரசாத் முருகேசனும் இயக்கியுள்ள குயின் வெப் சீரிஸில், ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் 5 ஆம் தேதி வெளியாகிறது இதன் ஆர்ப்பாட்ட டிரைலர். இந்த வெப் சீரிஸ் குறித்து இயக்குனர் பிரசாத் முருகேசனிடம் கேட்டோம்.

இது ஜெயலலிதாவோட கதைன்னு சொல்லப்பட்டாலும் அவங்க சாயல்தான் இருக்கும். கற்பனையா உருவாக்கப்பட்ட கதை. அதாவது வரலாற்றுப் புனைவு கதைன்னு சொல்லலாம். ஓர் ஆளுமைமிக்க பெண்ணோட கதையாகவும் இதைப் பார்க்கலாம். யாரோட நிஜ பெயரும் இதுல இடம்பெறலை. ஆனா, சாயல் இருக்கும். சில கேரக்டர்கள் புதுசா தெரியும். ஜெயலலிதா சாயல்ல, ரம்யா கிருஷ்ணன் நடிச்சிருக்காங்க.

மலையாள நடிகர் இந்திரஜித், பிரபல நடிகரா நடிச்சிருக்கார். எம்.ஜி.ஆர் சாயல் இருக்கும். அவர், பிரமாதப்படுத்தியிருக்கார்னு சொல்லலாம். மொத்தம் 11 எபிசோட். ஒவ்வொரு எபிசோடும் குறைஞ்சது 40 நிமிஷம் வரும்’ என்கிற பிரசாத், உலகம் முழுவதும் வெப் சீரிஸ் அதிகப் பொருட்செலவுல எடுக்கிறாங்க. சினிமா படத்துக்கான செலவை விட, இதுக்கு அதிகம். அந்த வகையில, தமிழ்ல அதிக பட்ஜெட்ல எடுக்கப்பட்ட பிரமாதமான வெப் சீரிஸாக குயின் இருக்கும் என்கிறார் நம்பிக்கையாக.

அதெல்லாம் சரி, சசிகலாவா நடிக்கறது யார்னு சொல்லவே இல்லையே? என்றால், விஜி சந்திரசேகர் நடிச்சிருக்காங்க. அவங்க சசிகலா சாயல்ல நடிச்சிருக்காங்க, சசிகலாவா நடிக்கலை என்கிறார். ‘கிடாரி’க்குப் பிறகு அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு தாமதம் என்றதும், தாமதமில்ல. எனக்கான சில வேலைகள் இருந்தது. அதை முடிச்சுட்டு படம் பண்ணலாம்னு இருந்தேன். இந்த வெப் சீரிஸ் முடிஞ்சதும் எம்.எஸ்.பாஸ்கர் மகன் அதித்யா பாஸ்கர் நடிக்கும் படத்தை இயக்கறேன் என்றார் பிரசாத்.

Advertisements

fogpriya

Next Post

இவ்வளவு ஹாட்டா..! "ராய் லக்‌ஷ்மி"யின் பகல் கனவு..?பலிக்குமா?

Wed Dec 4 , 2019
துபாய் பீச்களில் பிகினியில் சுற்றித்திரிந்த புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த ராய் லக்‌ஷ்மி, தற்போது க்யூட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். கோலிவுட்டில் தனக்கான சரியான இடம் கிடைக்கவில்லை என்று, பாலிவுட் சென்ற ராய் லக்‌ஷ்மிக்கு, அங்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அவர் நடிப்பில் இந்தியில் வெளியான ஜூலி 2 படமும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. மீண்டும் தமிழுக்கு வந்த ராய் லக்‌ஷ்மி, நடிப்பில் வெளியான […]
%d bloggers like this: