முன்னாள் காதலன்? சர்ச்சை பற்றி நடிகை “ஆண்ட்ரியா” கோபமான விளக்கம்..!

நடிகை ஆண்ட்ரியா ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும் அதில் அவர் காதலில் இருந்த ஒரு நபர் பற்றி எழுதியிருப்பதாகவும் செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவியது. அந்த நபர் ஒரு நடிகர்-அரசியல்வாதி என்றும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் ஆண்ட்ரியா இதுவரை இந்த சர்ச்சை பற்றி வாய்திறக்கவில்லை. தற்போது ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உண்மை என்ன என்பதை கூறியுள்ளார். நான் பேசிய நிகழ்ச்சியில் பத்ரிக்கையாளர்கள் யாரும் இல்லை. கேமரா எதுவும் இல்லை. அதனால் என் வாழ்க்கை பற்றி சில விஷயங்களை வெளிப்படையாக பேசினேன். நான் நடிகை என்பதையே மறந்துவிட்டேன். அது தவறு என பின்பு தான் புரிந்தது.

புத்தகத்தில் உள்ள ஒரு poem நான் படித்தேன். அப்போது அது எதை பற்றியது என கேட்டார்கள். நான் என்னுடைய மோசமான ஒரு காதல் பற்றியது என கூறினேன்.10 வருடங்களுக்கு முன்பு இருந்த காதல் அது. 10 வருடம் முன்பு தான் அந்த poem எழுத்தினேன். ஆனால் அதன்பிறகு நான் பேசியதாக பல்வேறு தவறான செய்திகள் பரவிவிட்டது.

இதையெல்லாம் பார்த்து கோபம் தான் வந்தது. ‘நடிகர்-அரசியல்வாதி’ என்றெல்லாம் கூறுகிறார்கள். கட்டுக்கதை போல ஒரு விஷயத்தை பரப்பிவிட்டார்கள். அதற்கு எப்படி விளக்கம் கொடுப்பது.. அதனால் அமைதியாக இருந்துவிட்டேன் என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

Advertisements

Next Post

100 கோடி ரூபாய் வசூல் செய்த "ஒத்த செருப்பு" படம்..!!

Thu Dec 26 , 2019
பார்த்திபன் எப்போதும் தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை எடுத்து வருபவர். தான் என்ன கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், இவர் எடுக்கும் படங்கள் தரமாகவே இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, விமர்சன ரீதியாக பலரும் புகழ்ந்தனர். இந்நிலையில் பார்த்திபன் ஒரு பேட்டியில் ‘ஒத்த செருப்பு படம் தியேட்டரில் ஓடியதை விட நெட்ப்ளிக்‌ஷில் வந்த பிறகு தான் இதை உலகம் முழுவதும் […]

Actress HD Images

%d bloggers like this: