“விக்ரம்” படத்திற்கு ‘கோப்ரா’ டைட்டில் ஏன்? என்ன சொல்கிறார்… இயக்குனர் அஜய் ஞானமுத்து..!!

விக்ரம் நடித்து வரும் 56வது திரைப்படத்திற்கு ‘கோப்ரா’ என்ற டைட்டில் வைத்தது ஏன் என்பது குறித்து அந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் உள்ள விக்ரம் கேரக்டருக்கும் ‘கோப்ரா’ என்ற பாம்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அந்த தொடர்பை ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை ரசிகர்கள் உணர முடியும் என்றும் அதனால்தான் இந்த படத்திற்கு ‘கோப்ரா’ என்ற டைட்டில் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த டைட்டில் பொதுவான ஒரு டைட்டிலாக இருப்பதால் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் இதே டைட்டிலை தான் தேர்வு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவிகிதம் முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட் டு இருப்பதாகவும் அஜய் ஞானமுத்து கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்றும் பாடல்கள் பிப்ரவரியில் வெளியாகும் என்றும் தற்போது மூன்று பாடல்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் இன்னும் இரண்டு பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் ஜனவரி இறுதிக்குள் கம்போஸ் செய்து கொடுத்து விடுவதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அஜய் ஞானமுத்து அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisements

Next Post

''டக்கர்'' படத்தில் நடிகர் 'சித்தார்த்' ஜோடியாகும் 'திவ்யான்ஷா கவுஷிக்'

Thu Dec 26 , 2019
மஜிலி தெலுங்கு படத்தில் நடித்தவர் திவ்யான்ஷா கவுஷிக். இவர் தமிழில் டக்கர் படம் மூலம் அறிமுகமாகிறார். சித்தார்த் நடிக்கும் இந்த படத்தை இயக்குநர் கார்த்தி கிரிஷ் இயக்குகிறார். யோகிபாபு, முனிஷ்காந்த், ஆர்ஜே. விக்னேஷ், அபிமன்யு சிங் நடிக்கிறார்கள். இதில் சித்தார்த் ஜோடியாக திவ்யான்ஷா அறிமுகமாக உள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள் நிரம்பிய காதல் படமாக ‘டக்கர்’ உருவாகியுள்ளது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். […]

Actress HD Images

%d bloggers like this: