விரைவில் சினிமாவில் இருந்து விலகுவேன்… சகநடிகரிடம் கூறிய அஜித்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருந்து வரும் அஜித் இன்னும் சில சினிமாக்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகும் எண்ணத்தில் இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். லொள்ளு சபா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற லொள்ளு சபா சாமிநாதன் சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதில் தான் கூட சேர்ந்து நடித்த நடிகர்களுடனான அனுபவம் பற்றி கூறிய அவர் அஜித்தைப் பற்றி ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நேர்காணலில் ‘விவேகம் படத்தின் போது நான் அஜித்துடன் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் தோல் மேல் கைபோட்டுக் கொண்டு அஜித் நீங்கள் எத்தனைப் படங்களில் நடித்திருப்பீர்கள்? எத்தனை ஹீரோக்களோடு நடித்திருக்கிறீர்கள்?என என்னைப் பற்றி விசாரித்தார். அதற்கு நான் 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன் சார் என சொன்னேன். பின்னர் அஜித் சார் ’நான் இன்னும் சில படங்களில் மட்டுமே நடிக்க இருக்கிறேன். நான் வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்வதற்கு முன்னால் நானாகவே வெளியேறிவிட வேண்டும் என நினைக்கிறேன் எனக் கூறினார். நான் உடனே சார் அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள் உங்கள் ரசிகர்கள் உங்கள் படத்துக்காக காத்துக் கிடக்கிறார்கள்’ எனக் கூறினேன். எனப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Advertisements

Next Post

‘தலைவர் 168’ படத்தில் திடீரென இணைந்த பிரபல நடிகை...!

Sat Feb 1 , 2020
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கும் நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சன் […]
%d bloggers like this: