கணவரை பிரிகிறாரா சமந்தா?..காரணம்..

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.


பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.   இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தன்னுடைய குடும்ப விழாக்களை புறக்கணித்து வருவதால் கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்து டோலிவுட் வட்டாரத்தில் முணு முணுக்கப்படுகிறது. அதாவது, நாகார்ஜுனா குடும்பத்தில் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்பத்தின் மூத்த மருமகளான சமந்தா இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இதற்கு முன்னர் கூட நாகார்ஜுனாவின் குடும்ப விழாவான அக்கினேனி தேசிய விருது விழா நடைபெற்றது. இதில் பல்வேறு பரபலன்கள் கலந்துகொண்ட சமந்தா மட்டும் பங்கேற்கவில்லை. பின்னர் ‘The Family Man’ படப்பிப்பில் பிசியாக இருந்ததாக கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். தற்போது மீண்டும் இதே போல் நடந்துகொண்டதால் சமந்தாவிற்கும் சைதன்யா குடும்பத்திற்கும்  மனக்கசப்பு இருப்பதாக டோலிவுட் வட்டாரம் கிசு கிசுக்கிறது.  மேலும் சமந்தா கணவர் நாக சைத்னயாவை சமந்தா பிரியவுள்ளார் என்ற ரேஞ்சுக்கு அக்கட தேசத்து ஊடகங்கள் கிசுகிசுத்து வருகிறது. 

Advertisements

fogpriya

Next Post

"ஹீரோ" சினிமா விமர்சனம்..!

Sat Dec 21 , 2019
நடிகர்கள் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், ரோபோ ஷங்கர்இசை யுவன் ஷங்கர் ராஜாஇயக்கம் பி.எஸ். மித்ரன்தமிழில் நேரடியாக எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மிகக் குறைவு. படத்தின் தலைப்பும் போஸ்டர்களும் அம்மாதிரியான ஒரு எதிர்பார்ப்பை சிவகார்த்திகேயன் நடித்த இந்தப் படம் மீது உருவாக்கியிருந்தன. ‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் இது. 90களின் இறுதியில் சக்திமான் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து வளரும் சக்திக்கு […]
%d bloggers like this: