செம க்யூட்.. தெறிக்க விடும்… விஜயின் “மாஸ்டர்” பட புகைப்படங்கள்… உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்..!!!

நடிகர் விஜயின் மாஸ்டர் பட ஸ்டில்ஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ கடந்த 14 ஆம் தேதி வெளியானது. லெட் மி சிங் எ குட்டி ஸ்டோரி என தொடங்கும் இந்த பாடலை இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க ஆங்கில வார்த்தைகளால் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லிரிக்கல் வீடியோவில் 3000க்கும் மேற்பட்ட கார்ட்டூன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாதக்கணக்காய் அமர்ந்து அந்த லிரிக்கல் வீடியோவை உருவாக்கியுள்ளனர். இந்த பாடலில் மத்திய பாஜக அரசை சாடும் வகையில் வார்த்தைகளும், கார்ட்டூன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாடலின் சில இடங்களில் படத்தில் விஜயின் கெட்டப் குறித்த போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் விஜயின் சில ஸ்டில்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் நடிகர் விஜய் கல்லூரி மாணவரை போலவே செம க்யூட்டாக உள்ளார். கழுத்தில் ஐடி கார்டு, ஃபார்மல் டிரெஸ், கண்களில் கூலிங் கிளாஸ் என பட்டையை கிளப்பியிருக்கிறார். இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சுமார் 30 ஆயிரம் லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.

அந்த போட்டோக்களுக்கு உங்களின் உயரிய எதிர்பார்ப்புக்கு அதிக தீர்மானங்களை நாங்கள் பரிசளிக்கிறோம்.. என்ஜாய் நண்பா என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் கேக்காமலே வாரி கொடுக்குற மனசு இருக்கே.. என புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். மேலும் சட்டு புட்டுன்னு டீசர் ரிலீஸ் பண்ணி விடுங்க மாப்பி என்றும் கூறியிருக்கின்றனர்.

Advertisements

Next Post

கடல் கடந்து வந்த பூனை... சென்னையில் கொரோனா பரப்ப திட்டமா...? திருப்பி அனுப்ப திட்டம்...

Mon Feb 17 , 2020
சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் துவங்கிய கொரோனா பாதிப்பு இப்போது உலக மக்கள் அனைவரையும் அச்சத்தில் வைத்துள்ளது. குறிப்பாக இந்தியா ஜனவரி 15 அல்லது அதன் பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான் பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழையே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியே இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் […]
%d bloggers like this: