பிரபல நடிகர் மகனுடன் ஊர் சுற்றும் யாஷிகா ஆனந்த்..!! வைரல் புகைப்படங்கள்…

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி என்பவருடன் டேட்டிங் சென்றுள்ள புகைபடங்களை தற்போது வைரலாகி வருகிறது.இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முன்பே அவர் ஜீவாவின் கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்சியாளராக சில நொடிகள் மட்டுமே வரும் ரோலில் நடித்திருந்தார்.

அதன் பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் நடிகர் மஹத்தை காதலிப்பதாக கூறினார் அவர். ஆனால் மஹத் ஏற்கனவே பிராச்சி மிஷ்ராவை காதலித்ததால் யாஷிகாவின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதன் பிறகு அவர் மிக அதிகமாக பாப்புலர் ஆனாலும் பட வாய்ப்புகள் அதிகம் எதிர்பார்த்த அளவு வரவில்லை. தற்போது கைவசம் ஒரு சில சிறிய பட்ஜட் படங்கள் மட்டுமே வைத்திருக்கிறார் அவர். ஆரவ் நடித்துள்ள ராஜபீமா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள அவர், மஹத் ஜோடியாக இவன் தான் உத்தமன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி உடன் இருக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். இருவரும் டேட்டிங் செய்வதாக செய்திகளும் பரவி வருகிறது. இருவரும் காதலிக்கிறார்களா இல்லை நண்பர்கள் மட்டும் தானா என்பது பற்றி பலரும் கிசுகிசுகின்றனர்.

உமாபதி இயக்குனர் சேரனின் ‘திருமணம்’ படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். உமாபதி ஹீரோவாக நடித்த மணியார் குடும்பம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

கருப்பு நிற உடையில்... நடிகை "நமிதா" லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்...

Tue Mar 17 , 2020
Advertisements
%d bloggers like this: