யோகிபாபு-வின் முருகன் வேடம்… யாரையும் காயப்படுத்தும் விதமாக உருவாக்கப்படவில்லை… ஃபர்ஸ்ட் லுக்கிலே சர்ச்சை..!!

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார். யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெய்ல்” என்கிற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் படத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் யோகிபாபு முருகன் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை பார்த்துவிட்டு சில இந்து அமைப்புகள் படத்தில் முருகனை தவறாக சித்தரித்துள்ளதாகவும் இது தங்களது மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து காக்டெய்ல் படத்தின் இயக்குநர் முருகன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது “நிச்சயமாக எந்த யாரின் உணர்வுகளையும் புண்படுத்தும் விதமாக இந்த படத்தின் கதையும் சரி, இந்த போஸ்டரும் சரி உருவாக்கப்படவில்லை. என் பெயரிலேயே முருகனை கொண்டுள்ள நானும் ஒரு முருக பக்தன். யோகிபாபுவும் ஒரு முருக பக்தர். அதனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இப்படி செய்யும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை. இந்த படத்தின் கதைப்படி முருகன் சிலை ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாங்கள் வடிவமைத்தோம்

முருகனையும் சிவனையும் கொண்டாடும் நாம் திரு விழாக்களில் முருகர் வேடமிடுகிறோம். சிவன் வேடம் அணிகிறோம். மாறுவேடப் போட்டிகளில், தமிழர் கலை சார்ந்த பண்பாட்டு நிகழ்ச்சிகளில் வேடங்கள் அணிகிறோம். எம் முருகப் பெருமானை வேடமிட்டு ஆராதிப்பது தமிழக மக்களின் வாடிக்கை தானே..?

அதையே சினிமாவில் காட்டும்போது மட்டும் எப்படி தவறாகி விடும்? இது முருகன், சிவனை போன்ற கடவுளை வழிபடும் கொண்டாடும் எங்களைப் போன்ற ஒவ்வொருக்கும் உண்டான தனிப்பட்ட உரிமையாகத்தான் பார்க்கிறோம்..

நாங்கள் வழிபடும் கடவுளை நாங்களே எப்படி தவறாக சித்தரிப்போம்: இது ஒரு மதுவை மையப்படுத்திய படமும் அல்ல. இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ள காக்டெய்ல் என்கிற டைட்டில் கூட ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு காக்டெய்ல் என்கிற கிளியை மையப்படுத்தியே வைக்கப்பட்டுள்ளதே தவிர அதற்கும் வேறு எந்த தவறான காரணமும் இல்லை. அதனால்தான் இந்த போஸ்டரில் முருகனின் வாகனமான மயிலை பயன்படுத்துவதற்குப் பதிலாக அந்த காக்டெய்ல் என்கிற கிளியை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம்” என விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் முருகன்.

Advertisements

Next Post

நடிகை "நயன்தாரா" மேக்கப் இல்லாமல் கூட சூப்பரா இருகாங்கயா... வெளிநாட்டில் கவர்ச்சியை அள்ளிதெறித்த நயன்தாரா..!!

Tue Feb 4 , 2020
தலைவர் 168 – ல் நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார். முந்தைய தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அண்ணாத்த என்கிற Title – ஐ வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டிற்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது […]

Actress HD Images

%d bloggers like this: